புரட்டிக்கொண்டே
இருக்கிறேன்
எனக்கான பக்கங்கள்
நீளுகின்றன....
காயங்களும்
வலிகளுமே
பல பக்கங்களை
ஆக்கிரமித்தபடி....
ஒன்றிரண்டு நீரூற்றுகள்
வழிந்தோடுகின்றன
பெரும்பாலும்
குடிசைகளே
நிறைந்திருக்கின்றன
ஈக்களை
அழிப்பதற்கு
வழியில்லை ...
கொசுக்கள்
கூட்டமாய்
கும்மாளமிடுகின்றன...
மாவிலை தோரணங்களாய்
மாட்டுக்கறி தோரணங்கள்
அலங்கரிக்கின்றன....
எங்கோ உதித்த தென்றல்
அங்கும் தனது தடத்தை
பதித்தபடி
இனம்புரியாத வாசத்தை
அள்ளிச் செல்கிறது...
என் புத்தகம்
கிழக்குப்பக்கமாகவே....
இருந்தபோதும்
இருண்டே கிடக்கிறது ...!
- சோலச்சி
புதுக்கோட்டை
9788210863
4 கருத்துகள்:
விரைவில் ஒளி தோன்றும்
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அய்யா
மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அய்யா
கருத்துரையிடுக