" ஊமைகளாய் கிடந்தோருக்கு
எதிராய்
மகாத்மா உண்ணாநிலை
இருந்ததும்...!
ஒடுக்கப்பட்டோரை
ஓட்டுக்கு மட்டுமே
ஒட்டிக்கொள்வதும்...!
இல்லாத ஒன்றை
இருப்பதாய் சொல்லி
அருளாத ஒன்றை
அருளியதாய் சொல்வதும்...!
முற்றும் துறந்தவன்
முந்தானை வாசம் குடித்து
கொட்டும் இன்பத்தில்
கோடிகளில் புரளுவதும்...!
பொய்யுரையால்
அரியணையில் அமர்ந்து
மக்கள் அவதியுற
ஆள்வதும் ...!
விற்காத வாக்கினை
விலை கொடுத்து வாங்கி
வாகை சூடியதாய்
வாய்கிழிய பேசுவதும்...!
பண்பாடு கலாச்சாரம்
பாழாக்கச் செய்து
மேனாட்டு உடைதனிலே
மேனி தெரிய நடை போட்டு
ஒய்யாரமாய் கை கோர்த்து
ஊடல் கொண்டு
ஊனமாகி
அய்யகோ அய்யகோ
அலறல் கேட்பதும்...!
எட்டிய தூரத்திலே
இறப்பென்று அறிந்தும்
எட்டி மிதிப்பதில்
ஆனந்தம் கொள்வதும்....!
வாழ்வு நீண்டதென
கனவு கண்டு
வந்ததையெல்லாம்
வாரி சுருட்டுவதும்
படுகொலைதான்....!"
போதும் போதும்
இன்னும்
எந்தெந்த விதத்தில்தான்
படுகொலை செய்யப்படும்
என் தேசம்....!
- சோலச்சி
புதுக்கோட்டை
முகவரி :
திருவள்ளுவர் நகர்
புல்வயல் அஞ்சல் - 622104
புதுக்கோட்டை மாவட்டம்
பேச : 9788210863
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக