வியாழன், 15 டிசம்பர், 2016

உணவுகளை வீணாக்காதீர்.....

காலம் தாழ்த்திய பதிவுதான் என்றாலும் கவனிக்க வேண்டிய பதிவு.....

       கஞ்சிக்கு வலியில்லாத இந்த தேசத்தில்தான் கௌரம் பார்த்து வீணாக்கப்படுகிறது உணவு . நம் இல்ல விழாக்கள் மட்டுமல்ல.... பொதுவாக விருந்து நடைபெறும் அனைத்து இடங்களிலும் இப்படித்தான்.

        சோறு கிடைக்காதா என்று ஏங்கி.... பயந்து... பயந்து பந்தியில் அமர்ந்து, ஒழுங்காக கூட சாப்பிடாமல் தனக்கு வைத்த இலையில் சோறு வாங்கி அதை துண்டிலோ சேலையிலோ மறைத்து கொண்டு வந்து தன் வீட்டில் உள்ளவர்களோடு அந்த எச்சில் இலை உணவை  சாப்பிட்டவனுக்கும் சாப்பிடுறவனுக்கும்தான் பசியின் அருமை தெரியும்.  உணவின் அருமை தெரியும்.

         பசிக்கு சாப்புடுறோமா, ருசிக்கு சாப்புடுறோமானே தெரியாமலே நாகரீகம் என்கிற பெயரில் வாழ்க்கை ஓடுது. தோழர்களே....! இனியேனும் எந்த நேரத்திலும் உணவுகளை ஒருபோதும் வீணாக்காதீர்கள். பசியின் அருமை உணர்ந்தவன் நான். ஒரு கைப்பிடி சோறுக்காக பந்தியில் இருந்து தூக்கி எறியப்பட்டவன் நான். அந்த வலி என் மரணம் வரை தொடரும்.  வீணாக்காதீர்கள் உணவை.

இடம்:  சென்னையில் உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்வில் கண்கள் கலங்க எடுக்கப்பட்ட புகைப்படம்.

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உலகிலேயே உணவுப் பொருட்களை அதிகம் வீணடிக்கும் நாடு நம் நாடுதான் நண்பரே