கவிதை
வளர்ச்சி .....!
என்னன்னமோ நடக்குதம்மா
ஏனு கேட்க நாதியில்ல...
ஏழையோட வாழ்க்கை மட்டும்
ஏக்கத்தோடு வீதியில...
பாட்டுல சொல்லி வாரேன்
பாரத தேசத்த அள்ளித் தாரேன்.....!
மண் வளம் என்ன இல்லை
மாண்புமிகு நாட்டினிலே...
மனிதவளம் கொட்டிக்கிடக்கே - யாரிடமும்
மன்றாடத் தேவையில்லை ...!
ஏர் பூட்டி உழவு செய்த
காலம் இப்ப இல்லை ....
எல்லாமே மாறிருச்சே
ஏழை வாழ்க்கை மட்டும் மாறலையே.....!
வல்லரசு நாடுனுதான்
வாய்கிழிய பேசுறாங்க....
விஞ்ஞானம் வளர்ந்ததுனு
வேகத்தோடு சொல்லுறாங்க....
தொலைநோக்கு திட்டமுனு
தோள்தட்டி கூவுறாங்க....
ஊழலும் சுரண்டலும்தான்
நாட்டின் வளர்ச்சியா.....
வளருது வறுமையும்தான்
நாளும் தொடர்ச்சியா......!
- சோலச்சி
புதுக்கோட்டை
பேச : 9788210863
1 கருத்து:
அருமை
உண்மை
கருத்துரையிடுக