கேள்வி கேளடா.....
"கேள்வி கேளடா தோழா
கேள்வி கேளடா...
கால் வயித்து கஞ்சிக்கும்
கையேந்தும் நிலை ஏனோ....!
இந்தியா வளர்ச்சியிலே ஏறுதாம்
இமயமலை கூட புகழ்ந்து பாடுதாம்....
கார்பரேட் கம்பெனிகள்
நிலத்தை சுருட்டவே
விளைநிலத்தை சுருட்டவே
விவசாயம் செத்தொழியும்
கதையும் இங்குதான்.....!
எல்லோருக்கும் வங்கிகணக்கு
இருக்குதாம்
சுரண்டல்காரர் பணமெல்லாம்
பதுங்கு குழியிலாம்....!
வறுமையை ஒழித்திடவே
திட்டம் தீட்டியே
சட்ட திட்டம் தீட்டியே
வழக்கொழிந்து போகும் நிலை
நாளும் தொடருதே....!
இலவசமா கொடுத்து
உழைப்பை சுரண்டிட்டான்
இருக்கும் வளத்தை
தாரைவார்த்து கொடுத்துட்டான்....!
தெரு நாயைப்போல
பாமரனோ தவிக்கிறான்
தெருவில் தவிக்கிறான்....!
இன்னும் விடியலையே
வாழ்க்கையத்தான் மூட
துடிக்கிறான்....!"
- சோலச்சி
புதுக்கோட்டை
செல் : 9788210863
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக