ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

அறுந்த பல்லி..... - சோலச்சி

அறுந்த பல்லி.......

சுவரில் பல்லியை கண்டான் ஒருவன்.....
ஊரும் உயிரி வால் எதற்கு..?

வாளால் வாலை வெட்டினான்
துடித்து மடிந்த வாலால் துடித்தது....

துடிக்கும் வாலைக் கண்டு
துள்ளி மகிழ்ந்தான் ....

நாட்கள் கடந்தன ;
வால் அறுந்த பல்லி மீண்டும்
சந்தித்தது புதிய வாலோடு....
கையொன்றில்லை அப்போது அவனுக்கு ....
விபத்தொன்றில் விழுந்துவிட்டது ....!!!

எதுவும் பேசாமல் மௌனமானான் ;
பேசத் தொடங்கியது பல்லி.....

மனிதா... கடலைப் போன்றது உன் உள்ளம்
அதிசயமும் நீதான் ; அற்பமும் நிதான் ;
எதையும் எண்ணிவிடாதே அற்பமாய்....

இயற்கையின் நியதி அறிந்து
வாழ்வு தொடங்கு
ஊர்ந்து சென்றது உரையாற்றிவிட்டு.....

     - சோலச்சி புதுக்கோட்டை
     பேச : 9788210863

2 கருத்துகள்:

  1. இயற்கையின் நியதி மனிதனை வாயடைக்க வைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  2. இயற்கை ஒவ்வொரு செயலிலும், மனிதனுக்குப் பாடத்தைப் புகட்டிக் கொண்டேதான் இருக்கிறது.நாம்தான் கேட்பதாயில்லை
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு