திங்கள், 18 மார்ச், 2019

பக்குவமாய் மனசு - சோலச்சி





பக்குவமாய் மனசு....


எதற்கோ
பயந்து ஓடுவதாகவே
உணர்ந்தேன்
இதுநாள் வரை.....!

ஓடி ஓடி மறைந்தபோதும்
துரத்தி அடிக்கிறாய்
உன் துப்பட்டாவால்
அந்த மேகத்தை....!

நீ
ஓய்வு எடுப்பதன்
உச்சநிலைதானோ
அமாவாசை.....!

வெல்வதும்
பின்வாங்குவதுமான
நிலையில் 
தொடர்ந்தபடி.....!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
முழு நிலவாய்....



தேய்ந்து
மறைந்தபோதும்
பணியைத் தொடர்ந்தபடி
நீ.....!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
மகிழ்வதும்...

தொய்வின் நிலையில் 
தொலைந்து
போவதுமாய் நான்.....

எனக்குள்ளும்
இருக்கிறது
உணரத் தொடங்குகின்றேன்....

பக்குவமான
என் மனதை
ரசித்தபடி.....!

- சோலச்சி

காட்டு நெறிஞ்சி கவிதை நூலிலிருந்து .....

ஞாயிறு, 17 மார்ச், 2019

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா - சோலச்சி

மூன்றாவது (2019) புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 






          பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்


                     அருகில் வனச்சரகர் தாமோதரன் அவர்கள்



                            புகைப்படக்கலைஞர் சேகர் அவர்களுடன்





      கவிஞர் காசாவயல் கண்ணன் அவர்களுடன் நானும் தம்பி கவிஞர் ராகவ்கிருஷ்ணாவும்





தோழர் ஜெயச்சந்திரன், தினமணி தலைமை நிருபர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கவிஞர் காசாவயல் கண்ணன் 





கவிஞர் சுகன்யாஞானசூரி அவர்களுடன் அண்ணன் சண்முகநாதன் குடும்பத்துடன்





நாணயவியல் கழகம் அய்யா பசீர்அலி அவர்களோடு புதுகை செல்வா
 ஹைகூ கவிஞர் அண்ணன் மு.முருகேஷ் அவர்களுடன்


புதியதலைமுறை நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களுடன்



பரியேறும் பெருமாள் திரைப்பட உதவி இயக்குநர்களுடன்






பட்டிமன்ற பேச்சாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுடன் சேலம் கவிஞர் வஸந்தன்




                                           சேலம் கவிஞர் வஸந்தனுடன்



                                   கவிஞர் ஜீவி அவர்களுடன்



காவல்துறை நண்பர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவர்களுடன்



                                           உங்கள் தோழன் சோலச்சி




                       இளம்பேச்சாளர் அத்வைத்சாதனந்தனுடன்




        திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி அவர்களுடன்



                                       கவிஞர் புதுகைப் புதல்வனுடன்


               எழுச்சிக்கவிஞர் கீதா அம்மா அவர்களுடன்




        பேட்டி காண்கிறார் சகோதரி இலாகிஜான் அவர்கள்





     எங்கள் பள்ளி மாணவர்களுடன் தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி மற்றும் தோழர்கள்




கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலன் எங்கள் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கி வரவேற்கிறார் .அருகில் கவிஞர் புதுகைப்புதல்வன் மற்றும் கவிஞர் பீர்முகமது

   
                                         எங்கள் குழந்தைகளுடன்




      தம்பி கவிஞர் மலையப்பனுடன் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுடன்




     தம்பி ஜாக்டோஜியோ ரமேஷ் மற்றும் ஜாக்டோ ஜியோ மாரியப்பன் தோழர்களுடன்




     தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி,  எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் வனசரகர் தாமோதரன்




                                              தோழர் இமைகளுடன்

 
                                               மேன்மை பதிப்பகம்

சனி, 16 மார்ச், 2019

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - சோலச்சி

    
                          அன்னவாசலில் இலக்கிய கூட்டம்



             2019மார்ச் 16. புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அன்னவாசல் கிளை கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.













    புதுக்கோட்டை மாவட்டம்  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளையின் மூன்றாவது கூட்டம் சனிக்கிழமை மாலை கோகிலா ஆங்கிலப் பள்ளியில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் கே.ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில்  பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்க முனைப்போடு செயல்பட்டு அவர்கள் பிடியில் சிக்கி மீண்டு வந்த தமிழக விமானி அபிநந்தன் அவர்களுக்கு பாராட்டுகளும் தீவிரவாதத்தை வளர்க்கும் நாடுகளுக்கு கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






  மலைக்குடிப்பட்டி கவிஞர் நிரோஜா, இலுப்பூர் கவிஞர் ஜியோ ஸியூஸ் ராஜாமணி போன்றோர் கவிதை  வாசித்தனர். பத்தாம்வகுப்பு மாணவி லெட்சுமிப்ரியா உரைவீச்சு நிகழ்த்தினார். கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலனின் "ழ'' கவிதை நூல் குறித்து இலுப்பூர் இயன்முறை மருத்துவர் கவிஞர் கோவிந்தசாமி விமர்சன உரை நிகழ்த்தினார். புரட்சித்தமிழன் சத்தியசீலன் ஏற்புரை வழங்கினார். சமூக ஆர்வலர் புதூர் அடைக்கலம் நன்றி கூறினார்.
          தமிழறிஞர் செம்பை மணவாளன், எழுத்தாளர் மூட்டாம்பட்டி ராஜூ, எம்.சி.லோகநாதன், சீ.செந்தில்குமார், நாகராஜன்,  கோகிலா பள்ளி தாளாளர் மீரான் மொய்தீன், சேக் அப்துல்லா போன்றோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை எழுத்தாளர் சோலச்சி தொகுத்து வழங்கினார்.


கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் நூலுக்கான அங்கீகாரம் - சோலச்சி


பெருமை கொள்கிறேன் உங்களின் பேரன்பால்.....



      இனிய நந்தவனம் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட என்னுடைய  "கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூலுக்கு நீங்கள் அளித்த அங்கீகாரம் ......

13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.


23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.











17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.


            மேலும் இந்நூலினை தலைமையாசிரியர் ஒருவர் எம்.பில். ஆய்வும் செய்து வருகின்றார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
                                                                நட்பின் வழியில்
                                                        சோலச்சி புதுக்கோட்டை