Wednesday, 27 January 2016

சட்டம் பேசு....

அறந்தாங்கி நாகுடியில் வாசித்த கவிதை .....

"சட்டம் பேசு"

சட்டம் பேசு
நீதி நிலைத்திடவே
நித்தமும்
சட்டம் பேசு...!

எத்தனையோ திட்டமெல்லாம்
போட்டாங்க...
எளியோர் வாழ்க்கை
உயரலையே
ஓட்டு மட்டும்  கேட்டாங்க...!

நாடு சுற்றுவதில்தான்
நம் நாடு  இருக்குது...
காணொளியில்தான்
மாநிலமும் மினுக்குது...!

உழைப்பாளர்
வாழ்வு உயர
சட்டம் பேசு...
அவமதிச்சா
அவர் முகத்தில்
கரிய பூசு...!

இலவசத்தால்
நாடு பிச்சை எடுக்குது...
இருப்பதையும் அரசு
சுரண்டி கெடுக்குது...
உற்பத்திக்கு வழி கேட்டு
சட்டம் பேசு....
உதவலையா
அரசையே தூக்கி வீசு.....!!!

- சோலச்சி
புதுக்கோட்டை

இன்னும் பேசுவேன்...........

Friday, 22 January 2016

!!!!!!??!??

"முயன்றவரை

முயற்சி செய்கிறேன்

முடியவில்லையெனில்

முடித்துக்கொள்கிறேன்...!"

- சோலச்சி

புதுக்கோட்டை

!!!!!!??!??

"முயன்றவரை

முயற்சி செய்கிறேன்

முடியவில்லையெனில்

முடித்துக்கொள்கிறேன்...!"

- சோலச்சி

புதுக்கோட்டை

இரக்கம்

"இரக்கப்பட்டேன்

இப்போது

இறக்கப்படுகிறேன்...

என் உயிர்தான்

வேண்டுமென்றால்

எடுத்துக்கொள்

தாராளமாய்....

வாழ்ந்துவிட்டுப் போகட்டும்

உன்

வெற்றுடம்பு.....!"

- சோலச்சி

புதுக்கோட்டை

Saturday, 16 January 2016

அமைதி.....

கரியமில வாயுவை
கக்கியபடி
செல்கிறாய்....

அறுபடுவது
நானல்ல...

அமைதியாய் இருக்கும்
என்னுள்

அடமழையும்
அமில மழையும்

அதிகமாகவே இருக்கிறது ...!

-சோலச்சி

புதுக்கோட்டை

அமைதி.....

கரியமில வாயுவை
கக்கியபடி
செல்கிறாய்....

அறுபடுவது
நானல்ல...

அமைதியாய் இருக்கும்
என்னுள்

அடமழையும்
அமில மழையும்

அதிகமாகவே இருக்கிறது ...!

-சோலச்சி

புதுக்கோட்டை

Thursday, 14 January 2016

வாசித்தது...

அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த திருநாளில் அதிகாலை எழுந்ததும் முதல்  வேலையாக நிகழ்கால கவிஞரும் பெண்ணினத்தின் போராளியாகவும்  புதுக்கோட்டையில் வலம் வந்துகொண்டு இருக்கின்ற எங்கள் அம்மா

"எழுச்சிக்கவி்ஞர் மு.கீதா "
          (தேவதா தமிழ்)

அவர்களின் "ஒரு கோப்பை மனிதம்" என்கிற அற்புதமான கவிதை நூலினை வாசித்த மகிழ்ச்சியில் இப்பதிவினை இடுகிறேன்.

இந்த நூல் இவருக்கு இரண்டாவது படைப்பு.  முதல் படைப்பு "விழி தூவிய விதைகள்"

இந்நூலினை வாசித்து முடித்ததும்  பெரும் மகிழ்ச்சி என்னுள் பெருக்கெடுத்து ஓடுவதை உணர்கிறேன்.

அனைத்து கவிதைகளையும் பதிவில் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைதான்..

ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்..

இன்றைய சூழலில் அன்பு என்பதும் உறவு என்பதும் உணராத நிலையில் அனைவரும் அநாதையாக்கப்பட்டுள்ளோம் என்பதுதான் உண்மை.

தாய் தந்தைக்கு பணிவிடை செய்வதையும் அவர்கள் நம்முடன் இருப்பதையும் அவமானமாகவும் பெரும் சுமையாகவும் கருதுகிறோம்...

அதனை  கவிஞர் இவ்வாறு கூறுகிறார்.

"அடிக்கடி  கை தடவுகின்றது
மகனை சுமந்த வயிற்றை
முதியோர் இல்ல மூதாட்டி .."

இவ்வாறு நூல் முழுவதும் பல கோணங்களில் நம்முடன் கவிதைகளோடு பேசி உணர்வினை ஏற்படுத்துகின்றார்.

இந்த நூலினை  கீதம் பப்ளிகேஷன்ஸ் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

நூல் ஆசிரியர் எங்கள் அம்மா அவர்களின் சமூகப்பணி இலக்கியப்பணி மேலும் மலர வளர அன்பு மகனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நூல் வெளியிட்டோர் முகவரி:

கீதம் பப்ளிகேஷன்ஸ்
3/3, பத்மாவதி அவென்யூ,
திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 600096.
அழைப்பு: 044-24960231

தமிழர் திருநாள்

தை என்ற திருநாளை தமிழகம் கொண்டாட

கை ஏந்தி வரவழைக்க கானகத்தில் பூத்தாட

பொங்கிடும் பொங்கலால் பூங்குயிலும் கவிபாட

மஞ்சளும் பூச்சரமாய் மங்கையரகள் புகழ் பாட

மங்காத தீபமே மனசுக்குள் மணமாகவே....

பச்சைப் பட்டாடை நீ மறைத்து

பருவமும் தான் இழந்து

உருவமே மாறிவிட்டாய்..

உழவனிவனை உளமார வாழ்த்திவிட்டாய்...

கழனிப்பெண்ணே கண்ணோடு கண்ணாக

உன்னைத்தான் என்னோடு

உயிருக்குள் உயிராக்கினேன்...

மண் மலர மழை பொழிந்த வானே நன்றி

மழை பொழிய காரணமே மரங்களே நன்றி

உள்ளங்கள் செழித்திட
உழைத்திட்ட இயற்கையே

எந்நாளும் உனக்கு நன்றி

ஏர்பூட்ட துணையான எருதுகளே நன்றி

ஊர்போற்ற வாழ்ந்திடுவாய்
என் துணையே நன்றி.....!

-சோலச்சி

முண்டாசு கவிஞர் கலை இலக்கிய பேரவை

புதுக்கோட்டை

தமிழர் திருநாள்

தை என்ற திருநாளை தமிழகம் கொண்டாட

கை ஏந்தி வரவழைக்க கானகத்தில் பூத்தாட

பொங்கிடும் பொங்கலால் பூங்குயிலும் கவிபாட

மஞ்சளும் பூச்சரமாய் மங்கையரகள் புகழ் பாட

மங்காத தீபமே மனசுக்குள் மணமாகவே....

பச்சைப் பட்டாடை நீ மறைத்து

பருவமும் தான் இழந்து

உருவமே மாறிவிட்டாய்..

உழவனிவனை உளமார வாழ்த்திவிட்டாய்...

கழனிப்பெண்ணே கண்ணோடு கண்ணாக

உன்னைத்தான் என்னோடு

உயிருக்குள் உயிராக்கினேன்...

மண் மலர மழை பொழிந்த வானே நன்றி

மழை பொழிய காரணமே மரங்களே நன்றி

உள்ளங்கள் செழித்திட
உழைத்திட்ட இயற்கையே

எந்நாளும் உனக்கு நன்றி

ஏர்பூட்ட துணையான எருதுகளே நன்றி

ஊர்போற்ற வாழ்ந்திடுவாய்
என் துணையே நன்றி.....!

-சோலச்சி

முண்டாசு கவிஞர் கலை இலக்கிய பேரவை

புதுக்கோட்டை

Sunday, 10 January 2016

கவிஞர் வாலி அவர்களுடன்....

மடமையை கொளுத்து....

கோடிகளை செலவு செய்து தெருக்கோடிகளில் சாதனை விளக்க கூட்டம்...

ஆண்டவர்களை நம்பியும் பலனில்லை...

ஆள்பவர்களாலும்
பயனில்லை...

எப்போது மீளும் என் தேசம்....

மலிவு விலை கஞ்சிக்கும்
மக்கர் பண்ணும் பொருளுக்கும்
கை ஏந்தி நிற்குது
என் தேசம்.....

வாக்குகளை அடகு வைத்து
வாழ்க்கை நடத்தும்
அவலநிலை
என் தேசத்தில் மட்டுமே ...

இலவசங்களை கொடுத்து
வறுமையை தக்கவைத்து
அரசியல் பிழைப்பு நடத்தும்

இந்த தேசத்தில்

நம்  மடமையை கொளுத்துவோம்....

மாற்றத்தை நிலை நிறுத்துவோம்...

-சோலச்சி
புதுக்கோட்டை