அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இந்த திருநாளில் அதிகாலை எழுந்ததும் முதல் வேலையாக நிகழ்கால கவிஞரும் பெண்ணினத்தின் போராளியாகவும் புதுக்கோட்டையில் வலம் வந்துகொண்டு இருக்கின்ற எங்கள் அம்மா
"எழுச்சிக்கவி்ஞர் மு.கீதா "
(தேவதா தமிழ்)
அவர்களின் "ஒரு கோப்பை மனிதம்" என்கிற அற்புதமான கவிதை நூலினை வாசித்த மகிழ்ச்சியில் இப்பதிவினை இடுகிறேன்.
இந்த நூல் இவருக்கு இரண்டாவது படைப்பு. முதல் படைப்பு "விழி தூவிய விதைகள்"
இந்நூலினை வாசித்து முடித்ததும் பெரும் மகிழ்ச்சி என்னுள் பெருக்கெடுத்து ஓடுவதை உணர்கிறேன்.
அனைத்து கவிதைகளையும் பதிவில் சொல்லிவிட வேண்டும் என்று ஆசைதான்..
ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன்..
இன்றைய சூழலில் அன்பு என்பதும் உறவு என்பதும் உணராத நிலையில் அனைவரும் அநாதையாக்கப்பட்டுள்ளோம் என்பதுதான் உண்மை.
தாய் தந்தைக்கு பணிவிடை செய்வதையும் அவர்கள் நம்முடன் இருப்பதையும் அவமானமாகவும் பெரும் சுமையாகவும் கருதுகிறோம்...
அதனை கவிஞர் இவ்வாறு கூறுகிறார்.
"அடிக்கடி கை தடவுகின்றது
மகனை சுமந்த வயிற்றை
முதியோர் இல்ல மூதாட்டி .."
இவ்வாறு நூல் முழுவதும் பல கோணங்களில் நம்முடன் கவிதைகளோடு பேசி உணர்வினை ஏற்படுத்துகின்றார்.
இந்த நூலினை கீதம் பப்ளிகேஷன்ஸ் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள்.
நூல் ஆசிரியர் எங்கள் அம்மா அவர்களின் சமூகப்பணி இலக்கியப்பணி மேலும் மலர வளர அன்பு மகனின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நூல் வெளியிட்டோர் முகவரி:
கீதம் பப்ளிகேஷன்ஸ்
3/3, பத்மாவதி அவென்யூ,
திருமலை நகர் அனெக்ஸ்,
பெருங்குடி,
சென்னை - 600096.
அழைப்பு: 044-24960231
2 கருத்துகள்:
சிறந்த நூல்...
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
மிக்க நன்றி
கருத்துரையிடுக