தை என்ற திருநாளை தமிழகம் கொண்டாட
கை ஏந்தி வரவழைக்க கானகத்தில் பூத்தாட
பொங்கிடும் பொங்கலால் பூங்குயிலும் கவிபாட
மஞ்சளும் பூச்சரமாய் மங்கையரகள் புகழ் பாட
மங்காத தீபமே மனசுக்குள் மணமாகவே....
பச்சைப் பட்டாடை நீ மறைத்து
பருவமும் தான் இழந்து
உருவமே மாறிவிட்டாய்..
உழவனிவனை உளமார வாழ்த்திவிட்டாய்...
கழனிப்பெண்ணே கண்ணோடு கண்ணாக
உன்னைத்தான் என்னோடு
உயிருக்குள் உயிராக்கினேன்...
மண் மலர மழை பொழிந்த வானே நன்றி
மழை பொழிய காரணமே மரங்களே நன்றி
உள்ளங்கள் செழித்திட
உழைத்திட்ட இயற்கையே
எந்நாளும் உனக்கு நன்றி
ஏர்பூட்ட துணையான எருதுகளே நன்றி
ஊர்போற்ற வாழ்ந்திடுவாய்
என் துணையே நன்றி.....!
-சோலச்சி
முண்டாசு கவிஞர் கலை இலக்கிய பேரவை
புதுக்கோட்டை
2 கருத்துகள்:
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
வலைச்சித்தர் அவர்களுக்கு நன்றி
கருத்துரையிடுக