Tuesday, 29 November 2016

புத்தகத்திருவிழா...

வாருங்கள் தோழர்களே....

மிகப்பிரமாண்டமாய் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நான்காம் நாளில் புதுக்கோட்டை புத்தகத்திருவிழா....

   பட்டிமன்ற பேச்சாளர் தோழர் நந்தலாலா,  மற்றும் எங்கள் பாசமிகு கவிஞர்களுடன்....

  சோலச்சியின் "முதல் பரிசு " "காட்டு நெறிஞ்சி " நூல்கள் எண் 20 புதுக்கோட்டை படைப்பாளிகள் அரங்கிலும் S 3 மாம்ஸ் அரங்கிலும் கிடைக்கும்...

Monday, 28 November 2016

புதுக்கோட்டை புத்தக திருவிழா ...

புதுக்கோட்டை புத்தக திருவிழா ....

புல்லின் மேலே ....

புல்லின் மேலே
பனித்துளி பார்த்தேன்

பூவின் அடியில்
தேன் துளி பார்த்தேன்

நிலவின் ஒளியை
நின்று ரசித்தேன்

நான் பார்க்கின்ற
இடமெல்லாம்
என்னவளே
உலாவுகின்றாய்....

நாளும் உரசியே
என் உதட்டில்
தீப்பற்ற வைக்கின்றாய்....!

            - சோலச்சி புதுக்கோட்டை

Sunday, 27 November 2016

புத்தகம் ....!!!

கவிதை

           புத்தகம் ......!!!

வாயில்லாமல் நம்மை
வாழ வைக்கும் தோழன்..!

வாழ்வின் உயிரோட்டம்
உண்மையில் ஒளி..!

பொருட்செல்வம்
உழைப்பால் வருவது...!
கல்விச்செல்வம்
நல்லுணர்வால் மலர்வது...!

சிதருண்ட மனிதனை
சிந்திக்க வைப்பது ...!

அறியாமை இருளை
அகற்றி அரவணைப்பது...!

தான் என்ற அகந்தையை
நாணச் செய்வது...!

பேதம் பார்க்காது
பேணிக் காப்பது ...!

போட்டி பொறாமை
கிடையாது
புன்னகையோடு ஏற்பது..!

சாதி மதம்
ஏழை பணம் பார்க்காது..!

காகித ஏடுகளில்
பொறிக்கப்பட்ட
கல்வெட்டு...!

வயதில்லை
அளவில்லை
வாழ்நாளெல்லாம்
வரவேற்கலாம்...!

வாசிக்கும் நேரம்
வாழ்வின் உன்னத நேரம் ...!

நல்ல நூல்களைத் நாடு
நாளும் மலர்வாய் புகழோடு...!

        - சோலச்சி
               புதுக்கோட்டை
               பேச : 9788210863

புத்தகம் ....!!!

கவிதை

           புத்தகம் ......!!!

வாயில்லாமல் நம்மை
வாழ வைக்கும் தோழன்..!

வாழ்வின் உயிரோட்டம்
உண்மையில் ஒளி..!

பொருட்செல்வம்
உழைப்பால் வருவது...!
கல்விச்செல்வம்
நல்லுணர்வால் மலர்வது...!

சிதருண்ட மனிதனை
சிந்திக்க வைப்பது ...!

அறியாமை இருளை
அகற்றி அரவணைப்பது...!

தான் என்ற அகந்தையை
நாணச் செய்வது...!

பேதம் பார்க்காது
பேணிக் காப்பது ...!

போட்டி பொறாமை
கிடையாது
புன்னகையோடு ஏற்பது..!

சாதி மதம்
ஏழை பணம் பார்க்காது..!

காகித ஏடுகளில்
பொறிக்கப்பட்ட
கல்வெட்டு...!

வயதில்லை
அளவில்லை
வாழ்நாளெல்லாம்
வரவேற்கலாம்...!

வாசிக்கும் நேரம்
வாழ்வின் உன்னத நேரம் ...!

நல்ல நூல்களைத் நாடு
நாளும் மலர்வாய் புகழோடு...!

        - சோலச்சி
               புதுக்கோட்டை
               பேச : 9788210863

Tuesday, 22 November 2016

போகப்போக.....

துறைதோறும்
தனியாருக்கு
சொர்க்கமாகுது...!

இங்கே
தூண்டிவிட்ட கூட்டம்
சொகுசா வாழுது....!

ஏழையோட
வாழ்க்கை மட்டும்
கூவம் நதியில...!

ஏச்சு பிழைக்கும்
மனிதரெல்லாம்
கோட்டை மதிலிலே....!

அந்நிய முதலீடு
அதிகமாகுது...!

போகப்போக
இந்தியா
மீண்டும் அடிமையாகுது...!

         - சோலச்சி

Sunday, 20 November 2016

எட்டுத்திசையும்...

எட்டுத்திசையும்
உன்னைச் சுற்றும்
எழுந்திடடா - தம்பி
எழுந்திடடா...!

சுற்றும் உலகம்
உன்னைச் சுற்ற
வைத்திடடா - மனதில்
நல்லதை தைத்திடடா...!

அந்தக் கதிரவன்
வருகையினால்
வண்ணத் தாமரை
மலர்கிறதா....!

உந்தன் வருகையினால்
கதிரவன் உதிக்கட்டுமே....!

                - சோலச்சி

Thursday, 17 November 2016

நல்ல மனம் ....

நல்ல மனம் கொண்ட
மனிதர்களாலே
உலகம் வாழுது தம்பி...!

இங்கே
ஒவ்வொரு மனுசனும்
போதையினாலே
நாளும் வாழுறான்
வெம்பி...!

மது பழக்கமும்
புகைபிடி பழக்கமும்
பொல்லாத போதை தம்பி ...!

காம மோகமும்
காசு மோகமும்
நல்ல பாதையில்ல தம்பி ...!

வெள்ளம் திரண்டு
வந்தால் கூட
அணை கட்டி
தடுத்திடலாம்...!

உன்
தகாத ஆசை
திரண்டு வருதே
தடுக்க வழி என்ன
செய்திடலாம்....!

காலங்கள் இப்படி
கழிந்தால்
காத்திட முடியாது....!

உன்னை நீயே
காக்காவிட்டால்
வாழ்க்கை விடியாது....!

           - சோலச்சி

Wednesday, 16 November 2016

என்ன பெண்ணடி....

உன் ஐந்தடி உயரம்
சிந்தடி பாடுது
அந்த இரண்டு கண்கள்
என்னடி தேடுது...

காகித விரிப்புகள்
கைகளை தீண்டுதே
காதல் கடிதம்
எழுதச் சொல்லி
அவைகள் வேண்டுதே...

என்ன பெண்ணடி
உன்னை
கண்ணாடி ரசிக்குது...

உன் பேரழகு கண்டு
பெண்ணினம் வியக்குது...

விளைந்த நெல்மணி
வயலில் நாணுதே
என்னுள் நுழைந்த பெண்மணியே
ஏதேதோ தோணுதே....!

          - சோலச்சி

எங்கும் இல்லாத....

எங்கும் இல்லாத புதுமை
இன்று
என்னுள் வந்ததென்ன...!

விழிகள் நான்கும் ஒன்றாய்
பூவே
வேடிக்கை பார்ப்பதென்ன...!

மழைத்துளி மேகம்
என்மேல்
மோகம் கொண்டதென்ன...!

எதிரே பூத்த மலரே
நீதான்
வானில் தோன்றிய
விண்மீனோ...!

புதிராய் என்னில்
கணக்கு போட்டாய்
விடையும் நீதானோ...!

காதல் ஓடம்
மிதக்கிறது
உன்னைக் கண்டு
மனம் இனிக்கிறது ....!

              - சோலச்சி

Monday, 7 November 2016

மீனவர்

"கிழக்கே சூரியன்
உதிக்கிறதாம்
யார் சொன்னது
வெளிச்சம் வரவில்லையே...

வலை போட்டால் கடலில்
மீன் சிக்குமாம்
பொய்யாய் போனது.....

அடடா அடடா துயரம்
இதுதானோ எங்கள் பயணம்...!"

         - சோலச்சி