16.11.2018 அன்று கஜா புயல் தாக்கியதில் எங்கள் வீட்டு மரங்கள் வேரோடு சாய்ந்த கிடந்த காட்சியைப் பார்த்து நான்காம் வகுப்பு படிக்கும் என் மூத்த மகன் ஆரியா கண்ணீர் விட்டு கதறினான். அவன் அந்த மரங்களுக்கு செல்லப் பெயர்கள் வைத்து கொஞ்சி மகிழ்ந்து வந்தான். சோட்டாபீன், ஜாக்கிஜான், விஜய்சேதுபதி, என்று மரங்களுக்கு பல பெயர்கள் வைத்திருந்தான். மா, பலா, வாழை, கொய்யா, கறிவேப்பிலை, தேக்கு, நெல்லிக்காய் போன்ற மரங்கள் அவன் கண்முன்னால் விழுந்து முறிந்து சாய்ந்து கிடந்த காட்சியின் உணர்வுகளை இன்றைய 29.11.2018 இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்துள்ளது.
செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் குழுவிற்கும் தோழர் எழில் அரசன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
நட்பின் வழியில்
சோலச்சி
சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
வியாழன், 29 நவம்பர், 2018
இண்டியன் எக்ஸ்பிரஸில் என் மகன்
புதன், 21 நவம்பர், 2018
காஜா புயலில் எங்கள் வீடு - சோலச்சி
16.11.2018 காஜா புயலால் என் வீடும் மிகவும் பாதிக்கப்பட்டது. ஓரலளவுக்கு சரிசெய்து விட்டேன். இதுபோன்ற கோரத்தாண்டவத்தை இதுவரை பார்த்ததில்லை.
காஜா புயல் உதவிக்கரம் வேண்டி - சோலச்சி
காஜாபுயல் நிவாரணம் வேண்டி - சோலச்சி
உதவிக்கரம் வேண்டி....
வணக்கம் தோழர்களே....
காஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் முப்பது ஆண்டுகள் பின்னுக்கு சென்றுவிட்டது. மிகப்பெரிய பொருளாதார சேதம் அடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக இருக்கிறது. மின்சார ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் முழுமையாக மின்சார வசதி பெற எப்படியும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும். மக்கள் குடிநீர், உணவு, உடைகள் இன்றி தவித்து வருகின்றனர். பல ஊர்கள் தீவு போல் காட்சி அளிக்கின்றன. நண்பர்களாகிய உங்கள் மூலம் திரட்டப்பட்ட நிவாரண பொருட்களை நேற்று முதல் 20.11.2018 செவ்வாய் கிழமை ) மழையோடு மழையாக மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றோம். வெளிமாவட்ட நண்பர்கள் நிறைய பேர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உங்களிடம் உதவிகளை எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம். உங்களின் மேலான மனிதநேயமிக்க உதவிகளை பொருளாக கொடுத்து உதவினால் புதுக்கோட்டை எப்போதும் அந்த மறக்காது.
அரிசி,
சமையல் பொருட்கள்,
தார்பாய்,
பாய்,
மெழுகுவர்த்தி,
தீப்பெட்டி,
கொசுவர்த்தி,
கைலி ( லுங்கி) ,
நைட்டிகள்,
பிஸ்கட்,
பிரட்,
நாப்கின்,
போர்வை....
போன்ற அடிப்படை பொருட்களை கொடுத்து உதவ வேண்டுகின்றோம். சொந்த நாட்டில் அகதிகளைப் போல் உங்கள் ஆதரவை எதிர்பார்த்து காத்து இருக்கும் எங்களுக்கு உதவுங்கள் நண்பர்களே...
உதவிகளை எதிர்பார்த்து
சோலச்சி
தொடர்புக்கு....
கவிஞர் நா.முத்துநிலவன் 9443193293
கவிஞர் மு.கீதா 9659247363
கவிஞர் மலையப்பன் 7639972504
திங்கள், 5 நவம்பர், 2018
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - சோலச்சி
வாருங்கள் தோழர்களே....
வரவேற்று காத்திருக்கின்றேன்....
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா..!
2018நவம்பர் 24 முதல் 2018டிசம்பர் 3 வரை - புதுக்கோட்டை நகர்மன்றத்தில்...
மாலை நிகழ்வுகளின் சிறப்பு விருந்தினர்கள் :
1) எழுத்தாளர் எஸ்.ரா
2) பேச்சாளர் ஞானசம்பந்தன்
3) குன்றக்குடி அடிகளார்
4) சகாயம் ஐ.ஏ.எஸ்.
5) எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
6) எழுத்தாளர் சு. வெங்கடேசன்
7) முனைவர் சுப்பையா
8) கவிஞர். சல்மா
9) தோழர் ஸ்டாலின் குணசேகரன்
10) பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
11) "புதிய தலைமுறை" - கார்த்திகை செல்வன்
12) கவிஞர் அறிவுமதி
13) "காக்கை சிறகினிலே" - இரா. எட்வின்
14) "இந்து தமிழ்" - மு. முருகேஷ்
15) "பூவுலகின் நண்பர்கள்" - சுந்தர்ராஜன்
வாருங்கள் தோழர்களே....
புத்தக மழையில் நனைந்து
சொற்பொழிவுகளில் மூழ்கி
சங்கமிப்போம்.....
நட்பின் வழியில்
சோலச்சி
பேச : 9788210863