புதன், 28 நவம்பர், 2018

இண்டியன் எக்ஸ்பிரஸில் என் மகன்

16.11.2018 அன்று கஜா புயல் தாக்கியதில் எங்கள் வீட்டு மரங்கள் வேரோடு சாய்ந்த கிடந்த காட்சியைப் பார்த்து நான்காம் வகுப்பு படிக்கும் என் மூத்த மகன் ஆரியா கண்ணீர் விட்டு கதறினான்.  அவன் அந்த மரங்களுக்கு செல்லப் பெயர்கள் வைத்து கொஞ்சி மகிழ்ந்து வந்தான். சோட்டாபீன், ஜாக்கிஜான், விஜய்சேதுபதி, என்று மரங்களுக்கு பல பெயர்கள் வைத்திருந்தான். மா, பலா, வாழை, கொய்யா, கறிவேப்பிலை,  தேக்கு, நெல்லிக்காய் போன்ற மரங்கள் அவன் கண்முன்னால் விழுந்து முறிந்து சாய்ந்து கிடந்த காட்சியின் உணர்வுகளை இன்றைய 29.11.2018 இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்துள்ளது.
         செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் குழுவிற்கும் தோழர் எழில் அரசன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
           நட்பின் வழியில்
              சோலச்சி

2 கருத்துகள்: