ஞாயிறு, 19 ஜனவரி, 2020

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சமூக நல பேரவை விழா - சோலச்சி

      

          நடிகர் திலகம் சிவாஜிகணேசன்                                          அவர்களின்    

            92ஆவது பிறந்தநாள்விழா






       நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின்  92ஆவது பிறந்தநாள்விழா 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலையில்  ஒருநாள் நிகழ்வாக புதுக்கோட்டையில் இயங்கி வரும் நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கொண்டாடப்பட்டது. அதில் எனது கவிதை .....


                               சிவாஜி விருது பெறுகின்றேன்


ஆழ்ந்த உறக்கம்
நடுநிசி என எண்ணுகின்றேன்

என் தோள்பட்டையில்
யாரோ தீண்டுவதாக உணர்கிறேன்

ம் ..... தூங்கு

என் சின்னவனாக இருக்குமோ என்று
சினுங்கியபடி உறக்கத்தை தொடர்கிறேன்

மீண்டும் அதே தீண்டல்

தம்பி.........

என்கிறது கனத்த குரல் ஒன்று...

விழிகளை விரிகோணத்திற்கு
கொண்டு செல்கின்றேன்...

தலையில் கிரீடம்
இடையில் கூர்வாள்
மின்னும் பொன்னிற மேனி...

யார்...யார்.....
எனக்குள் வினாக்கள் எழுகின்றன...

கூரிய விழிகளுக்குள்
குடியிருக்கும் கண்கள்
வசீகரத்தோடு பார்க்கின்றன என்னை....

இரவினை ஒளியாக்கி
நடந்து செல்கிறேன் வாசலுக்கு....

குதிரைகள் பூட்டப்பட்ட
தேர் ஒன்று நிற்கிறது ...

தம்பி.....

மீண்டும் கம்பீரக்குரல் கேட்கிறது...

குரல் வந்த திசை நோக்கி
திரும்புகின்றேன்...

''கூடிய நட்பின் இலக்கணமே
பராசக்தியின் மைந்தனே
பாசமலரே
புதிய பறவையே
இரத்தத்திலகமே கர்ணா''
என்றழைக்கின்றேன்....

என் கைகளை இறுக பற்றி
வசீகர பார்வையால்
வாஞ்சையோடு அணைத்து
தோளில் மெல்ல தட்டிக்கொடுத்து
தேரில் அமர்ந்து செல்கிறார்
மருதநாட்டு வீரன் ஜீவகன்....

என்னை நானே
கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்
மெல்ல... மெல்ல...
சொல்லிக் கொள்கிறேன்
கனவு....கனவு...கனவு...

என் விரல்கள்
எழுதுகோல் தீண்டிட
கொட்டுகிறது கவி மழை...

விழி அழகு
விளிக்கும் சொல் அழகு
நடை அழகு
நானிலத்தில் தனியொரு அழகு....

மேடை நாடகங்களில்
நடித்தாய்
மேனியெங்கும்
உணர்ச்சிதனை வடித்தாய்....

நான்காவதாக பிறந்தாய்
நடிகனாக வளர்ந்தாய்
நடிப்பால் உயர்ந்தாய்....

குணசேகரனாக
ஓடினாய் ஓடினாய்
வாழ்க்கையின் கடைசிக்கே ஓடினாய்...

ஓடிய நீ நின்றுவிடவில்லை
பொறுத்தது போதுமென
பொங்கி எழுந்தாய்
மனோகரனாக....

கூண்டுக்கிளியாக
அடைபட்டுவிடாமல்
வீரபாண்டிய கட்டபொம்மனை
எங்கள்
விழிகளில் நிறுத்தினாய்...

உந்தன்
திருவிளையாடலில்
மயங்கியே கிடக்கின்றோம்...

எங்களை
ரசிக்க வைத்துப் பார்ப்பதில்
ராஜபார்ட் ரங்கதுரைதான்...
எனினும்
முதல் தேதியில்
அழவைத்து வேடிக்கை பார்த்தாய்...

அந்தமான் காதலிக்காக
அலைந்து திரிந்து
வசந்த மாளிகை கட்டி
சிவந்த மண்ணில்
ராஜராஜசோழனாக
எங்களுடனே இருக்கின்றாய்....

கலைத்திறனில் செல்வாக்கு பெற்றாய்
கட்சி அரசியலில்
பாடம் நிறையக் கற்றாய்....

நடிப்புத்துறையின் பல்கலைக்கழகம்
நானிலம் போற்றும்
நடிகர் திலகம்...

எங்கள்
சண்முகசுந்தரமே
தில்லான மோகனம்பாளும்
உந்தன்
நாதஸ்வர இசைக்குள்....

எங்கள் கவிச்சக்கரவர்த்தியே
மனம் குளிர வைக்கும்
மிருதங்க சக்கரவர்த்தியே...

முதல் மரியாதை
எப்போதும் உனக்குத்தானே...

யார் சொன்னது....?

ஊட்டி வரைதான் உறவு என்று...!

எங்கள்
ஆறுபடையப்பனை
ஈன்ற தகப்பா...
இப்பாரெங்கும்
உந்தன் படையப்பா....!!!!
                  - சோலச்சி புதுக்கோட்டை 






3 கருத்துகள்: