புதன், 11 மார்ச், 2020

அதிகாரத்திமிர் - சோலச்சி


                        அதிகாரத்திமிர்






முறத்தால் புலியை விரட்டினாள்
இது பழைய கதை...

மாவுக் கோலமிட்டு மிரட்டுகிறாள்
இது புதிய விதை....

ஆணவப்போக்கு
அடி நாக்கில் அமர்ந்துகொண்டு
உருட்டுகிறது மிரட்டுகிறது...

உரக்கப்பேசி
ஊர்வலம் சென்று
உழைக்கும் கூட்டம்
திரட்டுகிறது
எத்தர்களை விரட்டுகிறது....

நிழலைத் தொட்டார்கள்
விட்டுவிட்டோம்
நெறிக்கிறார்கள் கழுத்தை
கத்துகிறோம் கதறுகிறோம்....

சிறையில் அடைக்கிறார்கள்
சிரத்தை உடைக்கிறார்கள்....

அதிகாரத் திமிர்
அழிவைக் கொடுக்கும்
உரிமைக் குரல்
போரைத் தொடுக்கும்.....

சந்து பொந்தெல்லாம்
மதம் திணித்து
மதம் பிடித்து
அலைகிறார்கள்
மங்கிய அறிவோடு சிலர்
விலையாகிறார்கள்....



மத சார்பற்ற நாடு
ஆமாம்....ஆமாம்
ஏட்டளவில்...

தொழுதவனை விட
தொட்டு இடித்தவர்க்கே
சொந்தம் என்கிறார்கள்...

கூட்டை விட்டு
ஓடு என்கிறார்கள்...

முகாமுக்குள் அடைக்கிறார்கள்
மூச்சுக்கும் வரி விதிக்கிறார்கள்....

முன்னுக்குப் போக முடியவில்லை
ஒன்னுக்குப் போகவும் வழியில்லை...

ஏதிலிகளாய் ஆக்க
ஏகப்பட்ட சட்டங்களை
ஏகாதிபத்தியம்
எடுத்து வரும் நிலை காணீர்...

சோத்துக்கும் வழியில்லை
ஆட்சியின்
கூத்துக்கு அளவேயில்லை.....!!!

          - சோலச்சி புதுக்கோட்டை

1 கருத்து:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 19 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    எமது திரட்டியை தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்



    Please add followers button

    பதிலளிநீக்கு