23.03.2025
பனிப்பாறைகள் உருகி
கடல் மட்டம் உயருகிறது
மரங்கள் பெருகி
பூமித்தாயின் மேல் மட்டம் குளிர்கிறது
குளிர்விக்கின்ற தோழர்களை
கொண்டாடும் பெருவிழா
விதைக்கலாமின்
500 ஆவது வார விழா.....
வாருங்கள் தோழர்களே
வரலாற்றில் இடம் பிடிப்போம்
வாழ்ந்தோம் என்பதற்கான சான்றாய்
நல் இதயங்களைப் படிப்போம்...
கடல் மட்டம் உயர்வதை தடுப்போம்
காணும் இடம் எங்கும்
பச்சை நீராடை தொடுப்போம்..
உலக வரலாற்றில்
புதுக்கோட்டை உயர்ந்தே நிற்க்கிறது
வானத்து ஆழமும் நிறைந்து வழியும்
வற்றாத சொல்லெடுத்து
வாழ்த்தி மகிழ்வோம்........
பேரன்பின் வழியில்
சோலச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக