எத்தனைநாள் ஒடுங்கிநிற்பாய்?
அடிமை மாதிரி!..
சிலர் இதயங்களின் பொறாமையிலும்
இறகு சேகரி!
சித்தமெல்லாம் வெற்றிக்கென்றே
உரிய நாள்குறி!..
அந்தச் சிகரம்தாண்டி உயரம் தொடச்
சிறகு நீவிரி!
- கவிச்சுடர். கவிதைப்பித்தன்.
இந்தக் கவிதையை வாசிக்கின்ற பொழுது முடங்கி கிடப்பவனுக்குள்ளும் எழுச்சி பிறக்கும். தாழ்வு மனப்பான்மை கொண்டோரையும் தலை நிமிரச் செய்யும். அச்சம் உடைத்து துச்சமன பயணிக்க வழித்துணையாகும். இந்தக் கவிதை மட்டுமல்ல; ஐயா அவர்கள் எழுதுகின்ற ஒவ்வொரு கவிதையும் தமிழின் வரம் என்றே சொல்லலாம். கவிதைகள்தான் தமிழின் இனிமை என்றால்... ஐயா அவர்களிடம் உரையாடும் பொழுது கொட்டுகின்ற தமிழும் பேரின்பம்தான்.
இலக்கிய ஆளுமைகளின் கூடாரமாய் நெடுங்காலம் தொட்டு புதுக்கோட்டையின் அடையாளமாக திகழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்.முத்துப்பாண்டியன் அவர்களின் "பாண்டியன் புத்த-அகம்" எனும் அறிவு சுரங்கத்தில் போற்றுதலுக்குரிய பெருங்கவிஞர் ஐயா கவிச்சுடர்.கவிதைப்பித்தன் அவர்களைச் சந்தித்து "ஆப்பையால ஒரு அடி" என்னும் எனது கவிதை நூலை வழங்கி மகிழ்ந்தேன்.
அருகில் தண்டகாரண்யம் திரைப்படப் பாடலாசிரியர் அண்ணன் கவிஞர்.தனிக்கொடி , கவிஞர் வீம இளங்கோவன்,
கவிஞர் மரிய எட்வின், பாண்டியன் புத்த-அகம் உரிமையாளர் கவிஞர்.முத்துப் பாண்டியன் ஆகியோர்.
நாள்: 19.09.2025
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக