சோலச்சி
சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
ஞாயிறு, 23 மார்ச், 2025
விதைக்கலாமின் 500 ஆவது வார விழா
திங்கள், 10 மார்ச், 2025
பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி - கவிஞர் செங்கை தீபிகா
நூல் வெளியீட்டு விழா
08.03.2025
சனிக்கிழமை
![]() |
தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்கள் |
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளை நடத்திய "கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா கோகிலா ஆங்கிலப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
போற்றுதலுக்குரிய தமிழ்ச் செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை மற்றும் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் நூல் அறிமுகம் செய்தனர்.
![]() |
தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுடன் கவிஞர் செங்கை தீபிகா |
![]() |
தலைமை உரை உரை சோலச்சி |
![]() |
முனைவர் கலையரசன் மற்றும் எழுத்தாளர் பாண்டிச்செல்வம் |
![]() |
கவிஞர் நிரோஷா |
![]() |
எழுத்தாளர் பாண்டிச்செல்வம் |
![]() |
எழுத்தாளர் கனிமொழி செல்லத்துரை |
![]() |
பறக்க தயங்கும் பட்டாம்பூச்சி நூல் வெளியீட்டு நிகழ்வு |
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளையின் கௌரவத் தலைவர் தோழர் கே.ஆர்.தர்மராஜன் அவர்கள் முன்னிலை வகிக்க கிளைச் செயலாளர் தோழர் சாக்கிய பிரபு வரவேற்புரை வழங்க வீதி கலை இலக்கிய களம் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா, தமிழ்நாடு கலை இலக்கியப்பெரும் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் பாலச்சந்திரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் அன்னவாசல் கிளையின் வட்டார தலைவர் கவிஞர் நிரோஷா , பேராசிரியர் ஆறுமுகம் , மொழியியல் ஆய்வாளர் முனைவர் ஏசு ராசா, செங்காந்தள் பதிப்பகத்தின் நிறுவனர் தோழர் பவுலி, ஆகியோர் வாழ்த்துரை வழங்க உலகக் கவிஞர் பிரமுகமது, எழுச்சிக் கவிஞர் முருகேசன், கவிஞர் சின்ன கனகு, கவிஞர் அழ.கணேசன், கவிஞர் சக்திவேல், ராஜாளிபட்டி கவிஞர் ஹேமா மற்றும் தோழர்களும் உறவினர்களும் என திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தேறியது.
![]() |
உலகக்கவிஞர் பீர் முகமது அவர்கள் |
![]() |
மொழியில் ஆய்வாளர் ஏசு ராசா அவர்களுடன் ராஜாளிப்பட்டி கவிஞர் ஹேமா |
![]() |
எழுச்சிக் கவிஞர் முருகேசன் அவர்கள் |
![]() |
கவிஞர் நிரோஷா மற்றும் அவரது கணவருடன் |
![]() |
கவிஞர் இந்துமதி |
![]() |
தோழர் எம்.சி.லோகநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. நடுவில் மதிப்புரு முனைவர் மாயழகு அவர்கள் |
![]() |
தோழர் கே ஆர் தர்மராஜன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது |
![]() |
கிளைச் செயலாளர் கவிஞர் சாக்கிய பிரபு |
![]() |
தோழர் மரம் ராஜா அவர்கள் |
![]() |
மொழியில் ஆய்வாளர் தோழர் ஏசு ராசா மற்றும் பதிப்பகம் நிறுவனர் தோழர் பவுலி |
![]() |
கவிஞர் மு கீதா அவர்கள் |
![]() |
பேராசிரியர் ஆறுமுகம் |
![]() |
ஏற்புரை வழங்குகின்றார் கவிஞர் செங்கை தீபிகா |
![]() |
டாக்டர் சுபாஷ் காந்தி அவர்கள் |
![]() |
தோழர் பாலச்சந்திரன் அவர்கள் |
![]() |
போற்றுதலுக்குரிய தமிழ்ச் செம்மல் தங்க மூர்த்தி அவர்கள் |
நிகழ்வின் தொடக்கமாக கொட்டும் அருவி கோவிந்தசாமி அவர்கள் மகளிர் தின சிறப்பு பாடல்களை பாட புதுக்கோட்டை மரம் ராஜா அவர்கள் முன்னெடுப்பில் ஐந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
கவிஞர் செங்கை தீபிகா அவர்களின் கவிதைகள் குறித்து தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி அவர்கள் நூலில் பல கவிதைகளை குறிப்பிட்டு வெகுவாக பாராட்டி வாழ்த்தினார்கள். மகளிர் தின விழாவில் வெளியிடப்பட்ட இந்நிகழ்விற்கு பெண்கள் திரளாக கலந்து கொண்டது வெகு சிறப்பாக அமைந்தது.
பதிப்பகம்:
நூலின் விலை: ரூபாய் 150/-
நூல் தேவைப்படுவோர்
செங்காந்தள் சோழன் பதிப்பகம்
அலைபேசி எண்: +91 99425 63362
காதல், கோபம், பெண் விடுதலை, சமூகம், அன்பு ,இயற்கை, பெற்றோர், உறவினர்கள், அண்ணன், தம்பி , சகோதரி, ஆசிரியர் என பன்முகப்பட்ட நூலாக பறக்க தயங்கும் பட்டாம்பூச்சிகள் நூல் வெளிவந்திருக்கின்றது. தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய நல்லதொரு நூல். கவிஞர் செங்கை தீபிகா அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் இன்னும் ஏராளமான நூல்களை வெளியீடு செய்து உச்சம் தொட மனசார வாழ்த்தி மகிழ்கின்றேன்.
பேரன்பின் வழியில்
சோலச்சி
10.03.2025