இன்று வரும் வழியில் ....
புல்வயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.மீனாட்சி அவர்களை சந்தித்தேன்...
அப்போது நடந்த உரையாடல்...
"யாருப்பா அந்த கீதாம்மா...
அன்னைக்கி பேசிக்கிட்டு இருக்கும்போது... அக்கா நீங்க கீதாம்மா மாறியே பேசுறீங்க...னு சொன்னாப்ள அப்ப நா சொன்னே.. நீயும் (சோலச்சி) கனகராசு ம்தான் என் பிள்ளைங்க. ரெண்டு பேரும் ரெண்டு கண்ணு மாதிரினு..
அதுக்கு சொன்னாப்ள... நா கீதாம்மாவோட பிள்ளை. ஒங்க மனசுலயும் எடம் பிடிக்கிறத பாக்கத்தாக்க போறீக. அந்த கண்ணுல எனக்கும் எடம் கொடுக்கத்தான் போறீக.."
அதுவும் (கவிஞர் வைகறை) எம்பிள்ளைதானு யாருக்கிட்ட போயி இப்ப சொல்லுவேனு...
சொல்லிக்கொண்டே அழுது விட்டார்.
இப்படி எல்லோர் இதயத்திலும் இடம்பிடித்த என் மைத்துனர் கவிஞர் வைகறை இப்ப எல்லாரையும் அழ வச்சுட்டு போயிட்டாரே.......
1 கருத்து:
ஆண்பிள்ளை இல்லையே என்ற எனது ஏக்கத்தை போக்கியவன்...என் மீது வைத்திருந்த அளவிட முடியா பாசத்தை அவரது குரலே காட்டும்..நான் போன பின் போக வேண்டியவர்....எனக்கு முன்னே அவசரமா போயாச்சு.
கருத்துரையிடுக