திங்கள், 4 ஜூலை, 2016

எழுத்தாளர்கள்.... - சோலச்சி

          "எழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் மீது அதிக அக்கறை உள்ளவர்கள். அவர்கள் அக்கறை உள்ளவர்களா இல்லையா என்பதை அவர்களது எழுத்தும் செயலும் காட்டிக்கொடுத்துவிடும். பரிசுகளை நோக்கியும் விருதுகளை நோக்கியும் எவன் ஒருவன் தனது எழுத்தினை இயக்குகிறானோ அவன் எழுத்து வியாபாரி ஆகிறான். அவன் வெறும் புகழையும் விருதையுமே நேசிக்கக் கூடியவன்.  அவன் சமூகத்தின் மீது துளியும் அக்கறை இல்லாதவனாகிறான். தனது எழுத்தினை இலாப நோக்கோடு விற்பனை செய்வதும் வியாபாரம்தான். அதே நேரத்தில் எழுத்தினை இலவசமாய் கொடுக்கும்போது பல நேரங்களில் பயனற்றதாகிவிடுகிறது. எழுத்தாளர்களை இந்த சமூகம் ஏந்திக்கொள்ள வேண்டும்.  எழுத்தாளர்கள் இந்த சமூகத்தின் மீது அக்கறையோடு தனது எழுத்திலும் செயலிலும் தாங்கி நிற்க வேண்டும். "
         - சோலச்சி, புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை: