சனி, 15 ஏப்ரல், 2017

அண்ணல் அம்பேத்கார் 126

புரட்சியாளர்  ---126
----------------------------------------

01•            ராம்ஜி மாலோஜி சக்பால் அவர்களுக்கும் பீமாபாய் அவர்களுக்கும் பதினான்காவது குழந்தை யாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்

02 •              பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள்  மோவ்(MHOW) Military headquarters Of War  என்ற இடத்தில் பிறந்தார்.(14.04.1891)

03•                    சத்தாரா அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பீமின் பெயர் பள்ளி பதிவேட்டில் பீமாராவ் ராம்ஜி அம்பவடேகர் என்று இருந்தது  (1900).

04 •                    பீமின் ஆசிரியரான அம்பேத்கர் என்பவர் அம்பவடேகர் என்பதை அம்பேத்கர் என்று பள்ளிப் பதிவேட்டில் அவராகவே மாற்றிவிட்டார்.

05 •                பீம்  மராத்தா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். உடனடியாக எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் (1901).

06 •               அம்பேத்கருக் கும் ராமாபாய்க்கும் திருமணம் நடந்தது  (1906).
  

07 •                   அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார் (1907).

08 •               புரட்சியாளர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கேலூஸ்கர் தான் எழுதிய "பகவான்" என்ற புத்தரின் வ ரலாற்று  நூலை அம்பேத்கருக்கு பரிசாக வழங்கினார்.

09 •                  அம்பேத்கர் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார்(1908).

10 •                அம்பேத்கர் பரோட மன்னரை சந்தித்து பேசினார். அதன் விளைவாக அவருக்கு பரோடா மன்னரால் மாதம் ரூ.25 கல்வித்தொகை  வழங்கப்பட்டது (1910).

11 •          அம்பேத்கர் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார்

12 •             அம்பேத்கரின் முதல் மகன் யசுவந்தன் பிறந்தான்  (1912)

13 •                   அம்பேத்கர் பரோடா சென்று மன்னரிடம் பணியில் சேர்ந்தார்.

14 •                 அம்பேத்கர் தந்தை  இராம்ஜி (02.02.1913) இறந்தார்.

15 •                         பரோடா மன்னர் அம்பேத்கருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை அளிப்பதற்கான ஆணை பிறப்பித்தார்.

16 •                புரட்சியாளர் அயல் நாடு சென்று படிப்பதற்கான பரோடா அரசின் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்(1913).

17 •                புரட்சியாளர் நியுயார்க் சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ  சேர்ந்தார்  (20.17.1913) .

18 •                 புரட்சியாளர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ  தேர்வில் ( 1915) வெற்றிபெற்றார்.

19 •             " இந்தியாவில் சாதிகள் " என்று புரட்சியாளர் எழுதிய நூல் முதன்முதலில் அச்சு வடிவில் வெளி வந்தது (1916) .

20 •               இலண்டனில்   பொருளாதாரத்தில் எம்.எஸ். ஆய்வு பட்டம், டி,எஸ் உயர் ஆய்வுப்பட்டம்  மற்றும் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காகவும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார் (1916).

21 •              கொலம்பியா பல்கலைக்கழகம்  புரட்சியாளரின்  Ph.D பட்டத்திற்கான  ஆய்வுக் கட்டுரையை (1917) ஏற்றுக்கொண்டது.

22 •        பரோடா அரசின் இராணுவச்செயலாளர் (1917) பதவியில் சேர்ந்தார்.

23 •          இரானுவத்தில்  தீண்டப்படாதவர் என்ற காரணத்தால்  இழிவாக நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதால் பம்பாய்க்குத் திரும்பிவிட்டார்.

24 •                   பெர்ட்ரண்ட் ரசல் எழுதிய "சமூகத்தை மாற்றியமைப்பதற்கான கோட்பாடுகள்" என்ற நூல் பற்றிய திறனாய்வுக்கட்டுரை இந்திய பொருளாதார இதழில்  வெளியிடப்பட்டது (1918).

25 •                      பம்பாய் சைடன் ஹாம் கல்லூரியில் புரட்சியாளர் அரசியல் பொருளாதார துறையில் (11.11.1918) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
   

26 •         புரட்சியாளர் "தி டைம்ஸ் ஆப் இந்தியா " ஏட்டிற்கு மகார் என்ற புனைப் பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்.

27 •               சவுத் பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்து     தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

28 •                மூக் நாயக் (ஊமைகளின் தலைவன்) என்ற வார இதழை புரட்சியாளர் (1920) தொடங்கினார்.

29 •            இலண்டனில் உயர் கல்வியைத் தொடருவதற்காகச் சைடன் ஹாம் கல்லூரியின் பேராசிரியர் வேலையிலிருந்து விலகினார்.

30 •           கோல்ஹாப்பூர் சிற்றரசில்  மன்கோன் என்ற  ஊரில் நடைபெற்ற மாநாட்டிற்கு புரட்சியாளர் தலைமை தாங்கினார்.

31•                நாகாபுரியில் நடைபெற்ற அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்பினரின் முதலாவது மாநாட்டில் (01.06 .1920) புரட்சியாளர் கலந்து கொண்டார்.

32 •                    தன் கல்வியை தொடர்வதற்கு இலண்டன்  (1920) பயனமானார்.

33 •             புரட்சியாளர் இலண்டனில்  பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்திற்கான  கல்வி நிறுவனத்திலும் கிரேஸ் இன் சட்டக் கல்லூரியிலும் தன் படிப்பை தொடர்வதற்காக சேர்ந்தார்.

34 •                      ஜெர்மனி  பான் பல்கலைக்கழகத்தில்  மேற்படிப்பு படிப்பதற்காக  சென்றார் . மீண்டும் லண்டன் திரும்பினார்(1922).

35 •             புரட்சியாளர் இலண்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி          பம்பாயில் பாரிஸ்டராக வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.

36 •                  புரட்சியாளர்  எழுதிய ரூபாயின் சிக்கல் ஆய்வுக்கட்டுரை  இலண்டன் பல்கலைக்கழகம்  ஏற்றுக்கொண்டது. டி எஸ்., என்ற உயர் ஆய்வுப்பட்டத்தை அவருக்கு  வழங்கியது.

37 •                 பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபா என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்தற்காக  புரட்சியாளர்  பம்பாய் தாமோதர் அரங்கில் ஒரு கூட்டத்தை கூட்டினார்(1924).

38 •               மூக் நாயக் இதழ் அம்பேத்கரால் நிறுவப்பட்டது (1924)
 

39 •                             சத்ரா பள்ளியில் புரட்சியாளருக்கு ஆசிரியராக இருந்த அம்பேத்கரை நீண்ட  வருடங்களுக்கு  பிறகு சந்தித்தார் .

40 •                பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபை ஷோலாப்பூரில்  தீண்டப்படாத வகுப்பு மாணவர்கள்   தங்கி படிப்பதற்கான  விடுதி ஒன்றைத்  தொடங்கியது .

41 •              கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு புரட்சியாளர் எழுதிய "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிணாம வளர்ச்சி " என்ற ஆய்வு கட்டுரை இலண்டனில் இருந்து  பி.எஸ் கிங் அண்ட் சன்ஸ் கம்பெனி நூலாக வெளியிட்டது(1925).

42 •               பட்லிபாய் கணக்கியல் பயிற்சி நிறுவனத்தில்  பகுதி நேர விரிவுரையாளராக சேர்ந்தார்  (1925).

43 •                     இந்திய நாணயம் குறித்த ராயல் கமிஷன் முன் அம்பேத்கர்  சாட்சியம் அளித்தார்.

44 •                  பகிஷ்கிரித் ஹித்த காரணி சபா பதிவு செய்யப்பட்டது (1926).

45 •           புரட்சியாளரும்  பி ஜி சோலங்கியும் பம்பாய் மாகாணச் சட்டசபையின் உறுப்பினர்களாக நியமிக்கபட்டனர்.

46 •                   பம்பாய் மாகாண  சபை யில் புரட்சியாளர்  தன்னுடைய கன்னிப்பேச்சை நிகழ்த்தினார் (24.02.1927).

47 •               மகத் சத்தியா கிரகத்தில் கலந்து கொள்வதற்காக  விசைப்படகில் பம்பாயிலிருந்து  புறப்பட்டார் (1927).

48 •                 மார்ச் 20, சவுதார் குளத்தில் இரங்கி நீரை அள்ளி  பருகினார்.

49 •         பகிஷ்கிரித்  பாரத்  என்ற மாதம் இருமுறை இதழாக   புரட்சியாளர் தொடங்கினார்.

50 •           கல்யாணுக்கு அருகில் பத்லபூரில் நடைபெற்ற சிவாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

51 •         புரட்சியாளரின் வாழ்க்கை  வரலாற்றை  மராத்தியில் ஏழுதிய புகழ்பெற்ற  சி.பி காயர்மோடே என்பவர் அம்பேத்கரை பாபாசாகிப் என்று கருத்துரைத்தார்.

52 •              மகதின் சாதி இந்துக்கள் சவுதார் குளத்தில் தீண்டப்படாத வகுப்பினர் நீர் எடுப்பதற்கு  தடை ஆணை பிறப்பிக்க  கோரி  மதஉரிமையியல் நீதி மன்றத்தில் புரட்சியாளர் மீது                  வழக்கு (12.12.1927).

53•             மகத் மாநாடு  தொடங்கியது (25.12.1927) . அன்றிரவு 7.30 மணிக்கு மாநாட்டில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது.

54 •            புரட்சியாளரும் அவருடைய  தோழர்களும்  பௌத்த குகைகளை பார்வையிட்ட பின்பு சிவாஜியின் தலைநகரான ராய்க்காட்டை காணச் சென்றார்கள்.

55 •             அப்பாத்துரை  என்பவர் தெண்ணிந்தியாவில் புரட்சியாளரின் கருத்துக்களை  பரப்பினார். தீண்டப்படாத சாதிகள் பேரவை அமைப்பதற்கு உதவினார்.

56  •             தீண்டப்படாத வகுப்பு  மக்களின் கல்வி,வேலை வாய்ப்பு ,அரசியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அச்சிடப்பட்ட அறிக்கையை புரட்சியாளர் சைமன் குழுவிற்கு அனுப்பினார் (29.05.1928).

57 •                   பம்பாய் சட்டக்கல்லூரியில்  பேராசிரியராக நியமிக்க ப்பட்டார்.

58 •               மகார் வட்டன் முறையை ஒழிப்பதற்கான ஒரு மசோதாவை   அம்பேத்கர் பம்பாய்  மாகாணச் சட்டசபையில் முன் மொழிந்தார்.


59 •                     பம்பாய் மாகாணச் சட்டசபை சைமன் குழுவுடன்  செயல்படுவதற்கான  குழுவிற்கு புரட்சியாளரை தேர்வு செய்தது.

60 •                புரட்சியாளர் பூனாவில் சைமன் குழு முன் சாட்சியம் கூறினார்.

61 •                  சிப்ளன்  மாநாட்டில் புரட்சியாளர் தலைமை தாங்கினார். தீண்டப்படாத  வகுப்பு  மக்களுக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டது (1929).

62 •             தீண்டப்படாத வகுப்பினரின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி  சைமன் குழுவிடம் புரட்சியாளர் தனியாக அறிக்கை அளித்தார் (17.05.1929) .

63 •             புரட்சியாளர் பார்வதி கோயில் சத்தியாக்கிரகத்தை ஆதரித்தார் .

64 •                பகிஷ்கிரித்  கடைசி இதழ் வெளியான நாள் (15.11.1929).

65  •                        நாசிக் காலாராம் சத்தியாக்கிரக த்தை  புரட்சியாளர் ஆதரித்தார்  (03.03 .1930) . அன்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினார்.

66 •                   காலாராம்  கோயில் சத்தியாக்கிரகம் தொடர்பானவற்றில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  நடந்துக்கொள்ளும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பாய் மாகாண கவர்னருக்கு புரட்சியாளர் கடிதம் எழுதினார் (1930) .

67  •         அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்பினர்  மாநாட்டில்  புரட்சியாளர் தலைமை தாங்கி உரையாற்றினார் (08.08.1930).

68 •           இலண்டன் வட்ட மேசை  மாநாட்டிற்கான அழைப்பை  பெற்றார் (1930).

69  •               புரட்சியாளர் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பி.ஜி சோலாங்கி தலைமை ஏற்றார் .  வைஸ்ராய்  கப்பலில் வட்ட மேசை மாநாட்டிற்கு புறப்பட்டார்.

70•             புரட்சியாளரும்  இரட்டை மலை சீனிவாசனும் இலண்டனை அடைந்தார்கள்.

71 •                   பகிஷ்கிரித் பாரத் என்ற ஏட்டிற்கு பதிலாக ஜனதா என்ற இதழ் தொடங்கப்பட்டது (24.11.1930).

72 •                 புரட்சியாளர்  நாசிக் மாநாட்டில்  உரையாற்றினார் (10.03.1930).

73 •               தீண்டப்படாத  வகுப்பினர் காவல்துறையில் சேருவதற்கான  அரசாணை 1931ல் பிறப்பிக்கப்பட்டது.

74 •              இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் புரட்சியாளர் கலந்து கொண்டார் (07.09.1931).

75 •               இரண்டாவது  வட்ட மேசை மாநாடு முடிந்தவுடன்  புரட்சியாளர் அவருடைய பழைய ஆசிரியர்களை சந்திப்பதற்காக நியுயார்க் சென்றார் (1931).

76 •                     இந்திய
வாக்குரிமைக் குழு  லோதியன் பிரபு தலைமையில் அமைக்கப்பட்டது. புரட்சியாளர் இக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .

77 •                புரட்சியாளர்  அவர்களுக்கு  சென்னையில் ஆரவாரமான வரவேற்பு சென்னையில் அளிக்கப்பட்டது(1932).

78  •               நாகாபுரியில் 1932 ல்  நடைபெற்ற அனைத்திந்திய  தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டில் கலந்து கொண்டார்.மேலும்          பூனாவில்  புரட்சியாளர் அவர்களுக்கு  மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

79 •           அகல்யாசிரமம்  பொதுகூட்டத்தில் புரட்சியாளர் உரையாற்றுபோது எந்த தீண்டப்படாத வகுப்பில் பிறந்தேனோ , வளர்ந்தேனோ, வாழ்கின்றேனோ, அவர்களுடைய  முன்னேற்றத்திற்காகத் தொண்டு செய்யும் நிலைமையிலேயே நான் மடிய வேண்டும்  என்பதே என்னுடைய சூளுரையாகும்.

80  •          பிரட்டிஷ் பிரதமரையும் அமைச்சர்களையும் சந்திப்பதற்காக புரட்சியாளர்  லண்டன் பயணமானார் (26.05.1932) .

81  •                   பிரிட்டிஷ் பிரதமரிடம்  22 பக்கங்கள் நிரம்பிய வகுப்பு வாத பிரதிநிதித்துவம் உள்ளடங்கிய கோரிக்கை அறிக்கையை அளித்ததன் விளைவாக
பிரிட்டிஷ் பிரதமர் வகுப்புவாரித்  தீர்ப்பை அறிவித்தார். இதன்படி தீண்டாப்படாத  வகுப்பு மக்களுக்கு  தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட்டது.

82 •                 வகுப்பு வாத தீர்ப்பை  எதிர்த்துக்  காந்தி சாகும் வரை  உண்ணாவிரத  போராட்டத்தை  அறிவித்ததை தொடர்ந்து              புரட்சியாளர்,  மாளவியா, எம்.சி.ராஜா முதலானோர் காந்தியை எரவாடா சிறையில்(21.09.1932) சந்தித்தனர்.

83 •               புரட்சியாளர் காந்தியை மீண்டும்  சந்தித்தார் . புரட்சியாளருடன்  எம்.ஆர் .ஜெயகர்,பிர்லா ,சுனிலால்,மேத்தா, சி.இராசகோபாலாச்சாரி  ஆகியோர் சென்றிருந்தனர் (22.09.1932) .

84 •            புரட்சியாளரும்    காந்தியும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் . காந்தி உண்ணா விரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதற்காக புரட்சியாளர் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குத் தனி வாக்களர் தொகுதி கோருவதை கைவிட ஒப்புக்கொண்டார்.
மேலும்    பூனா ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் பிரதமர்  ஏற்றுக்கொண்டார்.

85 •             புரட்சியாளர் பம்பாய் மாகாண சட்டச்சபையில் கிராம பஞ்சாயத்துத் திருத்த சட்ட மசோதா               (06.10 1932) மீது உரையாற்றினார்.

86 •               புரட்சியாளர் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்படுவதற்கு முன் மெக்வால் சமூகத்தினர் புரட்சியாளருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தினார்கள் (04.11.1932) .

87 •             மூன்றாவது வட்டமேசை மாநாடு  தொடங்கியது (17.11.1932). அம்பேத்கார் கலந்து கொண்டார் .

88 •                 புரட்சியாளர்  பிறந்த நாள்தோறும்   (14.04.1933)    முதன் முதலாக பொதுவிழாவாகப் பம்பாய், நாசிக்,பூனா ஆகிய
இடங்களில்    கொண்டாடப்பட்டது.

89 •                 புரட்சியாளர் இலண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார் .         லின்லித்தோ பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் கூட்ட நடவடிக்கைகளில் அன்று (07.11.1933 ) புரட்சியாளர் கலந்து கொண்டார்

90 •          புரட்சியாளர் 1933 ல் இராஜகிரகா வீடு கட்டி முடிக்கப்பட்டது.

91 •               சூன் 1934 பம்பாய் அரசினர் சட்டக்கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் .

92 •        புரட்சியாளரின் மனைவி இராமா பாய் (27.05.1935) மறைந்தார்.

93 •                புரட்சியாளர் முதல் பம்பாய் சட்டக்கல்லூரியின்  முதல்வராக  நியமிக்கப்பட்டார் (01.06.1935).

94 •                   நாசிக் சாலையில் தீண்டப்படாத வகுப்பினர் மாநாடு  (10.03 1935 ) நடந்தது. இந்துக்கடவுள்களை , சாத்திரங்களை , புரோகிதர்களை, புனித பயணங்களைப் புறக்கணிப்பது என்றும் கோயில் நுழைவுப் பிரச்சாரத்தை நிறுத்தி விடுவது என்றும் அந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.

95•            சனவரி 1936 பூனாவில் அகல்யா ஆசிரமத்தில் என்.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் புரட்சியாளர் இந்து மதத்தை விட்டு விலகுவது என்ற தன்னுடைய முடிவை வலியுறுத்தினார்.
   

96 •          ஏப்ரல் 1936 சீக்கியர் கழகம் நடத்திய மாநாட்டில்  புரட்சியாளர் கலந்து கொண்டார்.

97 •      ஜாட் -பட்-தோடக் மண்டல் நடத்தும்       (27.04 1936 ) மாநாட்டிற்குத்  தலைமை ஏற்க வர முடியாது என்றும் தான் தயாரித்துள்ள தலைமை உரையில் ஓர் எழுத்தையும் மாற்ற முடியாது என்றும் புரட்சியாளர் அச்சங்கத்திற்கு தெரிவித்தார். மேலும்       ஜாட் -பட் -தோடக் மண்டல் மாநாட்டிற்காக (15.05.1936)  எழுதியிருந்த  தலைமை உரையை சாதி ஒழிப்பு என்ற பெயரில் நூலாக வெளியிட்டார் .

98 •                  இந்திய அரசியல் சட்டத்தின் படி 1935 ல் நடைபெற  இருந்த பொதுத் தேர்தலில்  போட்டியிடுவதற்காகச் சுதந்திர தொழிற்கட்சியை நிறுவினார்.

99 •          இந்தியாவில் பொதுத்தேர்தல் ( 1937)  நடைபெற்றது சட்டசபையில் மொத்தம் இருந்த 175 இடங்களில்  ஒதுக்கப்பட்ட இடங்கள் 15. புரட்சியாளரின் சுதந்திரத் தொழிற்கட்சியின் வேட்பாளர்கள்  17 பேர் வெற்றி பெற்றனர்

100 •             சுதந்திரத்  தொழிற்காட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர்களில் புரட்சியாளர், பி,கே.கெய்க் வாடு, ஆர்.ஆர் போலே ,  டி.ஜி ஜதாவ்ஷாஸாஷா முதலானோர் குறிப்பிடத்தக்கவர்.

101 •      அமைச்சர்களின் சம்பளம் குறித்து (23.08.1937)  பம்பாய் மாகாணச்சட்ட சபையில் அம்பேத்கர் பேசினார்.

102 •               பம்பாய் மாகாணச்சட்ட சபையில் கோட்டிமுறை குறித்து உரையாற்றினார் . மகார் வட்டன் நிலமானிய ஒழிப்பு மசோதா மீதும் உரையாற்றினார்.

103 •           பந்தர்பூரில்  தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டில் சொற் பொழி வாற்றினார் (31.12.1937). மேலும்   ஷோலாப்பூர்   மாங் வகுப்பினர் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்  (1938).

104 •              பம்பாய் மாகாணச் சட்டசபையில்  நன்னடத்தை காரணமாகப் புதுக் குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கும் மசோதா மீது புரட்சியாளர் உரையாற்றினார். மேலும் அகமத் நகரில் (23.01.1938) விவசாயிகள் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.

105  •          பம்பாய் மாகாணச்  சட்ட சபையில்  காவல் துறைத்திருத்த சட்ட மசோதா மீது  உரையாற்றினார் கடைசி சொட்டு இரத்தம்
உள்ள வரை தீண்டப்படாத  வகுப்பு  மக்கள் சுரண்டப்படுவதை எதிர்ப்பேன் என்றார்.

106 •              பம்பாய் சட்டக்கல்லூரியின் முதல்வர்  பதவியிலிருந்து விலகினார்.

107 •            பூனாவில் அகல்யா ஆசிரமத்தில் தீண்டப்படாத மாணவர்கள் விடுதியில் பதினோராவது ஆண்டு விழாவில் புரட்சியாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.    பூனாவில்  கோகலே மண்டபத்தில் கூட்டாட்சியும் சுதந்திரமும் என்ற  தலைப்பில் சொற் பொழிவாற்றினார் (1939).

108 •          புரட்சியாளர்  மகாஸ்தவீர் சுந்தராமணியைக் குசிநாராவில் சந்தித்தார் (1943).

109 •          புரட்சியாளர் எழுதிய "பாக்கிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " என்ற நூலை தாக்கர்அண்ட் கோ என்ற நூல் வெளியீட்டு  நிறுவனம் வெளியிட்டது.

110 •               சூன் 1945 "காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன " என்ற புரட்சியாளரின் நூல் வெளியிடப்பட்டது,


111  •           புரட்சியாளர் மக்கள் கல்விக் கழகத்தைப் பம்பாயில் அமைத்தார்              (சூலை 1945).


112•             பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழுவின் முன் புரட்சியாளர் சாட்சியம் அளித்தார் (10.01.1946).

113 •                   சென்னை யிலிருந்து வெளிவந்த ஜெய் பீம் ஏட்டில் "தீண்டப்படாதவர்களைப் புறக்கணித்திட காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்"  என்ற புரட்சியாளர் எழுதிய கட்டுரை வெளி வந்தது(1946) .

114  •          புரட்சியாளர் பம்பாயில் நிறுவிய சித்தார்த்தா கல்லூரி செயல் படத்தொடங்கியது (1946).

115  •         வைஸ்ராயின் நிர்வாக குழுவிலிருந்து புரட்சியாளர் விலகினார். மேலும்      புரட்சியாளர் எழுதிய" சூத்திரர்கள் யார் " என்ற நூல் வெளியிடப்பட்டது (13.10.1946).

116 •         புரட்சியாளர் அரசியலமைப்புச் சட்ட அவைக்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் (1946).

117 •           புரட்சியாளர் எழுதிய "மாகாணங்களும் சிறுபாண்மையினரும்" என்ற நூல் வெளியிடப்பட்டது (1947).

118•            புரட்சியாளரை தலைவராக கொண்ட அரசியல் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது (29.08.1947).       புரட்சியாளர் அரசியல் அமைப்பு சட்ட நகலை எழுதி முடித்தார் (பிப்ரவரி 1948).

118  •              புரட்சியாளர் சாரதா கபீரைத் திருமணம் செய்து கொண்டார் . புரட்சியாளரின் இரண்டாவது திருமணம்  இது(1946).

119 •             இந்துச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக புரட்சியாளர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது(1948).

120  •                இந்திய  அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது (1949) .

121 •                     "புத்தரும் பௌத்தத்தின் எதிர்காலமும்"  என்ற தலைப்பில் கல்கத்தாவின் மகா போதி ஏப்ரல் -மே இதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பினார் (1950).மேலும்  இலங்கையில் உள்ள  கண்டிக்கு சென்றார் .

122  •          பிரதமர்  நேரு இந்துச் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக புரட்சியாளரின் நிலைபாட்டை ஆதரிக்காமல் கைவிட்டு விட்டார்(1951) .

123 •             இந்து சட்ட திருத்த மசோதா தொடர்பாக புரட்சியாளர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார் .   எனவே  நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேத்கார்   விலகினார்.

124 •                உசுமானிய பல்கலைக்கழகம் புரட்சியாளருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது(1953).

125 •             இரங்கூணில்  தந்தைப் பெரியாரும்  அம்பேத்கரும் உரையாடினர் (1955), புரட்சியாளர் பௌத்த மதத்திற்கு மதம் மாறிய நிகழ்ச்சி நாகாபுரியில் நடைபெற்றது.

126 •          மாபெறும் மனிதராக திகழ்ந்த புரட்சியாளர் தில்லியில் அலிப்பூர் சாலையில்  உள்ள அவருடைய  இல்லத்தில் மறைந்தார் ,இரவு 9 மணிக்கு விமானம் மூலம் தில்லியிலிருந்து பம்பாய்க்கு அவர் உடல் எடுத்துச்செல்லப்பட்டது .(06.12.1956)

விழிப்பு  வந்தால் அது புரட்சி !
வெளிச்சம் வந்தால் அது எழுச்சி  !

        ---அன்புடன் ஆதிமொழி

1 கருத்து: