வெள்ளி, 20 செப்டம்பர், 2019

கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் கருத்தளிப்பு - கவிஞர் ஜெயாசக்தி







        எனது கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் நூல் குறித்து - கவிஞர் ஜெயா சக்தி, சென்னை



       "குருவிக்காடு "கதை வாசித்தேன் குரு. வீரமும் எழுச்சியும் புரட்சியுமாய் மனசு பதற்றத்தோடு வாசித்த போது. அந்த காக்கைகளும் கொக்குகளும் மனதை மாற்றி அடுத்த வரிகளுக்குள் பயணிக்க வைத்தது.உண்மையிலேயே அந்த அந்த வரிகளுக்குள் மூழ்க வைத்து மீள வைக்கிறது உங்களின் எழுத்தாற்றல். அசத்தல் குரு. 🤝🏻🤝🏻💐👏🏻👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐


  இரண்டாவது கதை "அலோ.. ஐ ச்சீ... பேசுறேன்."தலைப்பும் அலுவலகத்தின் ஆரம்பமும் ஏதோ... வேற மாதிரியோ... என்றெண்ணியதை தழைகீழாக மாற்றி வாசிப்பவரையும் குழந்தையாக மாற்றி விதம் மிக அற்புதம் குரு. "காற்றுக்கு பட படத்த காலண்டரும் கை தட்டியது "ரசனை குரு செம்ம. நானும்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻


  "வம்சத்தை தேடி" கதையல்ல... நடந்தது  நிஜமாக இருக்குமென உள்ளுணர்வு சொல்கிறது குரு.
வலி நிறைந்த கதை! 🌼


    "கதவு"கதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் குரு.
       கதை 5 வாசித்தேன் குரு. இறுதியாய் கொண்டுப்போக ஒன்னுமில்லை என்று மிக ஆழமாக சொல்லி., நல்ல மனிதனின் குணத்திற்க்கு இறப்பே இல்லையென பதிய வைத்தது. மிக அருமை குரு.💐🤝🏻👍🏻


    கதை 6 "பிச்சை புகினும்" சகித்து, சலித்து,மரத்து, மறந்து,பொறுத்து.,  வாழ்பவள் பெண்ணுக்குள்ளும்.. தன்மானதிற்கு., தன் பெற்ற பொண்ணுக்கும் ஒரு  இழுக்கென்றால் நிச்சயமாக... கண்ணகி தான் அவள். அசத்தல் குரு உண்மையை சொல்லனுமென்றால் நானும் சில நேரங்களில் "அங்காயி"😎👏🏻👏🏻👏🏻🤝🏻💐💐🌹






  "அம்மா "நிச்சயமாக கதையல்ல. வாசிக்க வாசிக்க அழுகைதான் வந்தது குரு. ஏனென்றால் என்னுடைய  அப்பா அதே நிலையில் தான் இருந்தார் "சாமிக்காளை" இடத்தில் நான். சில மனிதர்கள்  ஏதோ.... வானத்தில் இருந்து குதித்ததைபோல, பேச்சும், செய்கையும், பார்க்கும் போது மனசு ரொம்ப வேதனையாய் இருக்கு குரு. எது உதவி, எது நிரந்தரம், எது நிலைக்கும், என தெரியாதைப்போல் நடிக்கும் பொய்யர்கள் குரு. அப்படி இருப்பவர்களை அசைத்து போக வைக்கும் பேரழகான அம்மா காவியம்.

   


      கதை 7 "ஊமச்சி"குடும்ப கஷ்டத்தை நம்மிடம் சொல்லாமலே...  அந்த சிறுவயதிலும் பெற்றோரை புரிந்து நடந்துக்கொண்ட கடைசி தலைமுறை நாமாக தான் இருப்போம். குழம்பில் வெட்டிப்போட்ட காய்களை கரண்டியில் எடுக்கும் போதே பங்கு வைத்து எடுத்துக்கொள்வோம்.🥰😊👌🏻👌🏻அப்படியே... கிராமிய பேச்சை யதார்த்தமாக கொண்டுபோன விதம் பேரழகு..


      கதை 8 "தட்டுவண்டியும் தங்கராசும்"கதைக்குள் கதை என்பதையே.. மறந்து போக வைத்தது குரு. ஆனால் கதை ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் சிறப்பாக முடுச்சு ஒன்று போட்டு விட்டீர்கள். அருமை குரு.👌🏻👌🏻👍🏻🌸


     கதை 10 "சொன்னபடி வாழு"அசத்தல் குரு தலைப்பே.. நச்.
நிறைய பேர் அப்படி வாழ்வதே.. இல்லை. வாழ்ந்தால் நல்லாருக்கும்...💐👍🏻🌸👌🏻


    கதை 11."கருப்புச்சட்டையும் கத்தி கம்புகளும்.."சாதி பார்ப்பவகளுக்கு சாட்டையடி குரு. மனுசனுக்கு.... முன்னாடி மனுசன் தான். என்பதையும்., உயிரின் மதிப்பையும்., கிராமத்தில் நடக்கும் அவலத்தையும்., நாம் வாழ்ந்த வாழ்க்கையையும்.. இனி எப்படி வாழ வேண்டுமென்ற விழிப்புணர்வும்., வழி நடத்தும் இன்னுமொரு நசீர் பாய்.. உங்கள் எழுத்துக்கள் குரு. "அந்த வானம் முழுவதுமாய் விதைவை கோலம் பூண்டிருந்தது" அருமை அருமை குரு. வேதனையின் உச்சம். "ஆள்காட்டி பறவைக்கூட வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்தது." வேதனை குரு. அற்புதமான படைப்பு  குரு இன்னும் படைத்திட மனமார்ந்த வாழத்துகள் குரு💐💐👏🏻👏🏻👏🏻🤝🏻🤝🏻🤝🏻🤝🏻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக