திங்கள், 5 மே, 2025

நாள் பூரா நானும் உன்ன பாக்கனும் - சோலச்சியின் காட்டு வெறிச்சி நூலிலிருந்து

 நாள் பூரா நானும் உன்ன பாக்கனும்

நான் சாய உன் மடியும் பூக்கனும்


உன் நீளமான கூந்தல்

என் நெற்றியிலே வருடனும்.!

உன்ன நான் முழுசா திருடனும்.!


உன் உள்ளத்துல பூத்தப் பூ

மெல்ல உதட்டோரம் சிரிக்குது.!

உரிமையோடு என் இடுப்ப

ஒரு மாதிரியா அணைக்குது.!


உன்ன நெனச்சாலே பனியாறு

எம்மனசில் ஓடுது.!

நீ நெருங்க குளிரும்

இன்னும் கொஞ்சம் கூடுது.!


வாடைக்காத்து என்ன வந்து

தொட்டது இல்ல!- உன்

ஓரப்பார்வை என் உசுர

குடையுது புள்ள.!


ராத்திரியில் நான் தூங்கமுடியல.!

காத்திருக்கும் இரு மனசும்

ஒன்னு சேர பொழுதும் விடியல.!


நீ பூத்த அந்த நாளு

இன்னும் மனசில் நிக்குது.!

நிற்காம நீ பார்த்த

அந்த பார்வை இப்பவும் சொக்குது.!


சின்ன வயசிலேயே

என் கன்னக்குழி

உன்னை கட்டி இழுத்தது.!


சின்னப் பொண்ணா நீ இருந்த

உன் மனசு

என்ன ஒதுக்கி வச்சது.!


இப்ப ரெண்டு பேரும்

தவிக்கிறோமே...

அந்த காதல்

எப்படி நுழஞ்சது.!


என்ன அறியாம உன்ன

அழைத்தேன் அன்று ;

வந்திருந்தா தவிக்காதடி

நம்ம உசுரு இன்று.!

ஒன்னுக்குள் ஒன்னாவே

நாம இருப்போம்.!


அந்த

ஊரு உலகம் பார்க்கும் போதும்

வாழ்ந்து காட்டுவோம்.!


உன்னைத் தாங்கி

நானிருக்கேன்

தனிமையிலே உன்னைப் போல.....

  • சோலச்சி

[ சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" கவிதை நூலிலிருந்து....]


கருத்துகள் இல்லை: