ஞாயிறு, 14 ஜூன், 2026

கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களுக்கு அகவை தின வாழ்த்து மடல் - சோலச்சி

     போற்றுதலுக்குரிய எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்களின் இனிய அகவை தினத்தில் ஐயா அவர்களை ( 14.06.2026 ) அவர்களது இல்லத்தில் சந்தித்து மகிழ்ந்தேன். 

   ஐயா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த அகவை தின வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.





   அகவை தினத்தில் நான் வழங்கிய வாழ்த்துப்பா மடல்.


                   வாழ்த்து மடல் 


செந்தமிழ்ச் சுடரே செழுந்தேனின் சுவையே

நந்தன தமிழின் நனிமிகு கவிதையே

சிந்தனைக் களஞ்சியமே சீர்மிகு ஓவியமே

காந்திநகரின் கனிச்சுளையே கலைமிகு காவியமே


கலைஞர் வார்த்தெடுத்த கவின்மிகு சொல்லேரே

பெரியார் பேரறிஞர் பெருமைமிகு பெருந்தலைவர்

பாட்டுச் சக்கரவர்த்தி பாவேந்தரைக் கண்டதில்லை

கூட்டுக் கலவையாய் தமிழ் உம்மைக்காட்டி மகிழ்கிறாள்


பாட்டுத் திறத்தாலே பாரை ஆளுகின்றாய்

எட்டுத்திக்கும் தமிழோசை கூட்டி மகிழ்கின்றாய்


சந்தப்பாவேந்தர் வெண்ணரசின் சங்கிலித் தொடரே

கருப்புத் தங்கம் மண்டேலா கண்டிருந்தால்

பொறுப்புடனே கட்டித் தழுவி இருப்பார்

பொறாமை கொள்ளும்படி பூமித்தாயும் மகிழ்ந்திருப்பாள்


ஒடுக்க நினைப்போரை ஓங்கி அறையும்

மிடுக்கான பேச்சு மிளிர்வதெல்லாம் தமிழ்மூச்சு

தயங்கும் மனிதருக்குள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்

தன்னிகரில்லா  பாவேந்தே தடையின்றி பேசும்

கன்னித்தமிழ் கண்டு கழனியே செழிக்கும்


சோர்வடையா உன்கண்கள் சொந்தமெல்லாம் கூட்டிவரும்

சோம்பேறி மனிதரையும் சொடக்குபோட்டு எழவைக்கும்


நரைமுடிதான் நற்றமிழின் நாடித் துடிப்பு

கறைபடியா கவிச்சுடரே கலை நிலத்தில்

உம்பிறப்பு கலைஞரின் உடன்பிறப்பில் உன்னதமே.

       - சோலச்சி

சனி, 13 ஜூன், 2026

முட்டிக்குறிச்சி நாவல் - சோலச்சி

 முட்டிக்குறிச்சி:



உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கு பேரன்பின் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சோலச்சியின் முதல் நாவலான "முட்டிக்குறிச்சி" பரவலான வரவேற்பை பெற்றதில் பெரும்மகிழ்ச்சி கொள்கிறேன்.

        இந்நாவலில் வரும் கதாநாயகியும் அவரது தோழிகளும் காளைக்கோழி மலையைச் சுற்றிப் பார்க்கச் செல்வார்கள். அப்பொழுது அங்கே மண்டி கிடக்கும் கத்தாழைப் பழங்களை பறித்து ஆசை தீர சுவைத்து உண்பார்கள். அந்த அத்தியாயத்தைப் படிக்கின்ற பொழுது உங்களுக்குள்ளும் அந்தப் பழத்தைச் சுவைக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களை அறியாமல் எழும்.  பழத்தைச் சுவைத்தவர்களுக்குத் தெரியும் அதன் இன்சுவை பற்றி..




எப்பொழுது எங்கு பார்த்தாலும் அந்தப் பழங்களை சுவைத்து விட்டுதான் செல்வேன். ஆரோக்கியம் மிகுந்தது; அதிக சுவை கொண்டது.

   இப்படி நாவல் முழுவதும் பழங்களும் கிழங்குகளும் சொன்னவுடன் எச்சில் ஊறும் சுவை மிகுந்த உணவுகளும் கண்களுக்கு குளிர்ச்சியான மரங்களும் காட்சிகளும் நிறைந்து கிடக்கின்றது.



இந்நூல் ஸீரோ டிகிரி விருது தேர்வு பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு எழுத்து பிரசுரம் 2023ல் வெளியீடு செய்தது. உலகெங்கும் வாழும் தோழர்கள் அவ்வப்போது என்னைத் தொடர்பு கொண்டு இந்நாவல் குறித்து சிலாகித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

        தோழர்கள் பலரும் என்னைத் தொடர்பு கொண்டு நாவல் கைவசம் இருந்தால் அனுப்பி வையுங்கள் என்று கேட்கின்றார்கள். உங்களின் பேரன்பினை எண்ணி மகிழ்கின்றேன். பதிப்பகத்தாரிடம் நீங்களே தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்ளலாம் என்பதையும் இதன்மூலம் தெரிவித்து மகிழ்கின்றேன்.

எழுத்து பிரசுரம் பதிப்பகத்தார் அலைபேசி எண்:

+91 89250 61999

https://tinyurl.com/Mutttikurichi

மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும். இதன் மூலமாகவும் நாவலைப் பெற்றுக்கொள்ளலாம்.

     இந்த நாவலை வாசித்தால் நிச்சயம் இதில் வரும் கதை மாந்தர்களும் காட்சி அமைப்புகளும் உங்கள் மனசைவிட்டு அவ்வளவு எளிதாக கடந்து சென்றுவிட மாட்டார்கள்.  இந்நாவலை ''ஆன் லைன்'' மூலம் ஆர்டர் செய்து வாங்கிட மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள விபரங்களைப் பூர்த்தி செய்து உரிய விலை கொடுத்து நூலினை வாங்கி வாசிக்க வேண்டுகின்றேன்.

அல்லது

ஸீரோ டிகிரி பப்ளிகேஷனின் எழுத்து பிரசுரம் அலைபேசி எண்

+91 89250 61999 தொடர்புகொண்டு நூலினை வாங்கி வாசிக்கவும். சோலச்சியின் எழுத்துகளில் மண்வாசனையும் காட்சிப்பதிவுகளும் புதுக்கோட்டையின் வட்டார வழக்குச் சொற்களும் குறையாது நிரம்பிக்கிடக்கும். இத்தகவலை தங்களின் தோழமைகளுக்கும் பகிர்ந்து உதவவும்.

மகிழ்ச்சியும் பேரன்பும்

சோலச்சி

9788210863

சனி, 16 மே, 2026

ஹைக்கூவின் ஞான ராகங்கள் - தங்கம் மூர்த்தி

 

      

புதுக்கோட்டையின் புகழ் மகுடமாய் திகழும் எங்கள் தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி  அவர்களின் மற்றொரு பரிணாமம் " ஹைக்கூவின் ஞான ராகங்கள்"



ஹைக்கூ நூல்கள் மற்றும் இதழ்களுக்கு எழுதிய மதிப்புரையின் தொகுப்பே இந்நூல். ஹைக்கூ எழுத நினைப்பவர்கள் அல்லது நூல்களுக்கு மதிப்புரை எழுத வேண்டும் என நினைப்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நல்லதொரு இலக்கிய நூல்.

  1. தமிழ் ஹைக்கூ அப்துல் ரகுமான் முதல் மித்ரா வரை - மு.முருகேஷ்

  2. பச்சையம் என்பது பச்சை ரத்தம் - பிருந்தா சாரதி

  3. மழை வாசம் - இன்பா

  4. தூண்டில் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள்

  5. பனைமரக்காடு - ஈழபாரதி ( பிரான்ஸ் )

  6. வே - டெய்சி ராணி

  7. மழை நின்ற வீதி - மகேந்திரன் நவமணி

  8. ஹைக்கூ ஓர் கூர்நோக்கு - நந்தவனம் சந்திரசேகரன்

  9. முற்றுப் பெறாத கவிதை - பிரேமா கிறிஸ்டி

இத்தகைய நூல்களையும் அதன் படைப்பாளர்களையும் இந்நூலில் பதிவு செய்து மதிப்புரையாக வழங்கி ஹைக்கூ நூல்களுக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்திருக்கின்றார் போற்றுதலுக்குரிய தமிழ்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள்.

இந்நூலில் தமிழ்ச்செம்மல் அவர்களின் நேர்த்தியான நேர்காணலும் இடம்பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.
இந்நூலினை அகநி வெளியீடு செய்திருக்கிறது.

64 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 100/-

பதிப்பகத்தார் அலைபேசி எண்: 9444360421

       இந்நூலை எனக்கு வழங்குகின்ற பொழுது சில இனிய சொற்களை பதிவு செய்து கையொப்பமிட்டு வழங்கி உள்ளார்கள். இப்படி ஒரு பதிவினை பதிவு செய்து எனக்கு  வழங்கி இருப்பது மிக உயரிய விருதுகளுக்கும் மேலான விருதாக நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்கின்றேன். தங்களின் பேரன்பால் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன் ஐயா. தங்களைப் போன்றவர்களால் புதுக்கோட்டையின் மாண்பு மேலும் உயரட்டும்.

பேரன்பின் வழியில்
சோலச்சி





தமிழ்ச் செம்மல் அவர்களின் இனிய வாழ்த்துடன்




திங்கள், 11 மே, 2026

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - எழுத்தாளர் சி.அன்னக்கொடி

 02.05.2026 புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த மூன்றாம் ஆண்டு அறமனச் செம்மல் சீனு சின்னப்பா அவர்களின் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்திருந்தார் பேரன்புக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்கள். அவரது “கூத்தின் சுவாசம்” என்கின்ற நாவல் விருது பெற்றது. அந்த விருதை பெறுவதற்காக திருவில்லிபுத்தூரில் இருந்து வருகை புரிந்த அண்ணன் அவர்களிடம் எனது “ஆப்பையால ஒரு அடி” கவிதை நூலை வழங்கியிருந்தேன். அந்த நூலினை வாசித்து மதிப்புரையும் வழங்கி இருக்கின்றார்கள். அண்ணன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

     -சோலச்சி





இதோ அந்த மதிப்புரை........

அப்பாையால ஒரு அடி.

இந்த கவிதைப் புத்தகத்தின் பேரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா.

இந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தையும் இந்த அப்பாதைதான் அலங்கரிக்கிறது. இதை இந்தத் தலைமுறை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இனி கொஞ்ச காலந்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய சட்டி பானை தட்டு கரண்டி இது எதுவும் இருக்காது.

காலை மாலை இரவு இப்படி மூன்று நேரமும் உணவகத்திலிருந்து பார்சல் வரும், அதை அவரவர் பிரிச்சுச் சாப்பிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். இரவும் அத சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கலாம். அந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல ஊடுருவி ஆக்கிரமிக்க துவங்கிவிட்டது. இதிலே வேடிக்கை என்ன வென்றால் இப்படிச் சமையலே செய்யாமல் வெட்டிப் பொறனியாகப் பேசி இப்படி மூணு தேரமும் வாங்கிச் சாப்பிடுகிற குடும்பத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குடும்பங்கள் இருக்கும் அவர்களை மற்றவர்கள் இது கடைக்காட்டு பிறக்கித் தின்னுட்டு திரியுதுக.. இவங்ககிட்ட எவ்வளவு சொத்து இருந்தாலும் தங்குமா அப்படி என்பார்கள். இன்றைக்கு எல்லாக் குடும்பத்திலும் இந்தக் கலாச்சாரம் பரவ ஆரம்பித்துவிட்டது. இது சமூகத்தின் அவலம். நோய் நொடிகளைத் தானே வரவழைத்துக் கொள்வது.. பிறகு அய்யோ அம்மா எனக் கத்துவது. இந்த சமூகத்தை அப்பாயாலே அடிக்க வேணும் போல இருக்கிறது.

தேடுகிறேன்

அந்த அப்பா சொல்கிறது

என்னைத் தூக்கி எறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

நான் என்னையே மறந்துவிட்டேன்

என்னைப்போய்த் தேடுகிறாயே என்கிறது.

அகப்பை என்ற சொல்தான் அப்பா என்று வட்டார வழக்கில் மருவியது. அது ஒரு தேங்காய் மூடி கொண்டு செய்யப்படும் கரண்டி.

இப்படி ஒரு கவிதைத் தலைப்பைப் பார்த்தவுடனே ஒரு ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது. இதில் என்னமோ இருக்கிறது புத்தகத்தைத் திறக்கத் தோன்றுகிறது.

உள்ளே போனால் மடை திறந்த வெள்ளம் போல சாதியால் மதத்தால் அரசியலால் இந்த நாடு இத்தனை நூற்றாண்டுகளாகியும் எப்படி சிதைந்து கிடக்கிறது என்பதற்கு காரணமானவர்களையும் வறுத்தெடுக்கிறார் இந்த நூலாசிரியர். இது மட்டுமல்ல குடும்ப உறவு காதலையும் மையப்படுத்தி எழுதியுள்ளார்.

சமூக அறம் அறச் சீற்றம் நிறைந்து நிற்கிறது இந்த நூலில். அதுதான் ஒரு எழுத்தாளனின் அறம்.

நான் புதுக்கோட்டை செல்லும்போது திருப்பத்தூரிலிருந்து புதுக்கோட்டை வரை உள்ள ஊர்ப் பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்கள் அத்தனையும் அழிக்கப்பட்டிருநதன. பார்த்து மகிழ்ச்சி என் கண்களில் பூத்தது.

அதற்கு யாராவது ஒரு காரணமாக இருக்க வேண்டும். அதற்கு இந்தக் கவிதைகூட காரணமாக இருக்கலாம்

ஹாட் டாட்டில்

அன்னைத் தமிழுக்கு இழுக்கு எனில்

அடங்கியா இருப்பாய்

மண்ணை ஆள்பவன் என்றாலும்

இடியாய் முழங்கு- மண்ணை

ஆண்டவன் என்றாலும்

எரிதழலாய்க் கிளம்பு.

இயற்கை எப்படி சீரழிகிறது

வானத்தை எப்படி கெடுத்து வைத்திருக்கிறோம் என்பதற்கு இதோ ஒரு கவிதை ஒரு விதைபோல விழுந்திருக்கிறது

உழுத்துப்போன

விறகை எரித்த சாம்பைலையொத்த

வானவீதியில்

நெற்றியை மட்டும்

நீட்டி நீட்டி

போக்குக் காட்டி

பாதை அமைக்கிறது நிலா.

இந்தக் கவிதை ரசிக்கவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கிறது.

இது ஒரு முரண் கவிதை.

என் உசுரே வழி நடத்துவதே என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை கவிதையாக ஒரு நாட்டுப்புற பாடலாக நம் கண் முன் மிளிர்கிறது.

அதில் சில வரிகள்

பழைய வயலில் சம்பா நெல்லு

அறுக்கப் போனோமே.

குத்திய சம்பா நெல்லை பிரிச்சு

அரிச்சுத் தின்னோமே

வாய்க்கால் வரப்பெல்லம்

நம் கதையைச் சொல்லுமடி

வாய் தெறந்து சொல்லு

நான் துணையாய்

அவரெனெடி.

இதோ மதத்திற்கு ஓர் கவிதை

மதம் -நான் வாழ வழியல்லவா

சொல்ல வேண்டும்

எனக்குள் வலியை அல்லவா

வழங்கியிருக்கிறது.

இதற்குள் எத்தனை பொருள் அடங்கிக் கிடக்கிறது. மதத்தால் சாதி சாதியால் சண்டை மூடநம்பிக்கை.

சாதியால் ஊர்கள் அழிகின்றன

மதத்தால் நாடுகள் அழிகின்ற

இதுதானே உண்மை.

இன்னொன்று இன்றைய நடப்பதை வைத்து ஒரு கவிதை அதுதான் மேற்கு வங்கத்திலும் நடக்கிறது. தமிழ்நாட்டிற்கும் வந்து விடுமோ என அஞ்சுகிறேன்.

கற்பு என்பது பொதுவென்று

கற்பிக்க மறந்து போனதாலே

தீயுக்குள் தள்ளப்பட்டால் சீதையுமே

ஆண்கள்

திருப்பி அடித்துத் தீயில் தள்ளியிருந்தால்

அன்றே அவனும செத்திருப்பான்.

ஆண்டுகள் கடந்தும்

எப்படி முளைத்திருப்பான்.

எது அறம் என மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அதற்கு ஒரு சாட்டையடி.

மாட்டுக்கறி ஏற்றுமதியில்

முதலிடம் வகிக்கிறோம்

நாம் தின்னக்கூடாது என

கத்தியைத் தீட்டுகிறார்.

இது முரணும் சமூக நீதிக்குமான கவிதை.

ஒரே தேர்தல் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற முழக்கத்திற்கெதிராய் ஒரு பெரு முழக்கக் கவிதை.

ஒரே நாடுன்னு ஏத்துக்கிட்டு

பல வருசம் ஆச்சு பிள்ளை

ஒரே மொழின்னு திணிக்குறாங்க

நம்ம ரத்தம் கொதிக்குது உள்ளே

கடைசியில் ஒரு உசுரும்

இல்லாமல் ஆக்கப் போறாங்க

ஒரேயடியாக நம்மைத்தானே

அழிக்கப் பாக்குறாங்க

அதற்கடுத்து கவிஞரின் வரிகளைப் பாருங்கள்

இங்கு எரிமலைகள்

இல்லையெனச்

சொல்லுறாங்களே

நீயும் நானும்

கொதித்தெழுந்தால்

அடங்குவாங்களே.

ஒரு இனம் அழிய வேண்டுமானால் அவன் மொழியை அழிக்க வேண்டும்.

அவனுக்கென இருந்த மொழியை அழித்துவிட்டால்

அவனுக்கு உசிரேது

அகவே எரிமலையாய்

நோஹிலு.

மாட்டுக்கறி ஏற்றுமதியில்

வயது.

மாட்டுக்கறி தின்றால்

கத்திபாயும்.

சர்வதேச

மாட்டு மோத்திரம் குடி

தின்னாதே மாட்டுக்கறியை.

இதுவும் அந்தக் கும்பல்தான்

இப்படி முரண்பட்ட ஒன்றைச் சொல்கிறது.

இந்த புத்தகத்திற்கு தலைப்பிட்டுள்ள அப்பாையால அடியும் நவம்பர் 25 கவிதையும் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்கு எழுதிய கவிதை ஞாபகத்திற்கு வருகிறார்.

இதுபோல எத்தனையோ கவிதைகள்

இவை அணைத்தும் பாவேந்தர் பாரதிதாசன் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஆகியோரின் கவிதைகளின் பின்னோட்டமாகவும்

அண்ணல் அம்பேத்கார் தந்தை பெரியார் ஆகியோர் கொள்கைகளின் கூட்டுக் கனியாகவும் அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல.

இத்தனை சொல்கிறீர்களே இந்த நூலாசிரியர் யார் எனச் சொல்லவில்லையே..!

இப்படி எழுத யாருக்கு துணிச்சல் வரும்.

என் அன்பு இளவல் புதுக்கோட்டை கவிமதி சோலச்சி.

விருது பெறுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்தான் வழங்கப்பட்டது.

வாங்கிய பொழுதே வாசித்து முடித்தேன்.

அவருடைய கவிதை சிறுகதைகள் நாவல் அனைத்தையும் படித்திருக்கிறேன். அதை வைத்து சொல்கிறேன். இலக்கிய தாகம் மட்டுமல்ல சமூக தாகமும் கொண்ட இளவல் சோலச்சி

தலைசிறந்த இலக்கிய ஆளுமையாக வருவார் என வாழ்த்துகள்.


- எழுத்தாளர்.சி. அன்னக்கொடி


கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742

விலை ரூ 150/-

எழுத்தாளர் சி.அன்னக்கொடி அவர்களுடன் சோலச்சி



வியாழன், 12 பிப்ரவரி, 2026

திரு.ப.அமிர்தராஜ் அவர்களின் பார்வையில் சோலச்சியின் கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்.

புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் திரு.ப.அமிர்தராஜ் அவர்களின் பார்வையில் சோலச்சியின் கரும்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்






கருப்புச் சட்டையும் 

கத்திக் கம்புகளும்

எடுத்துரைக்கிறது

உண்மையான சாமி

நம்ம மனசு தாயானு..... 


காலம் இவ்வளவு சீக்கிரம் சுருங்கும்

என்று யாருக்குத்தான்

தெரியும்.... கடந்த கால

நினைவுகளை தேவைக்கு அதிகமாக வழங்குங்கள் இந்த கருப்புச் சட்டை..... 


உன்னால் முடியாது என்றால் 

உலகத்தாலே முடியாது.. 

நம்மால் முடியாது என்றால் 

எவராலும் முடியாது... 💪


கருணாவும் முத்துசாமியும் இணைந்த கைகள்🫂


ஊமச்சி தடவும் பாக்கியராசு

நம் கண்ணீரையும் 

தடவி விட்டுச் செல்கிறான்...... 


எல்லோரும் விழித்தார்கள்

பழனியம்மாள் மட்டும்

விழிக்கவே இல்லை... 

விழிகளில் நிரம்பி வழிகிறது கண்ணீர்... 


நானும் கருப்புச் சட்டைக்காரன் தானு

சொல்லும் போது 

நானும் நசீர்பாயுடன் 

பயணிக்கிறேன்....


இப்படி எல்லா கதாபாத்திரமும்

 நம்முடன் பயணிக்கிறது.... 


வட்டார வழக்கு

வழக்கம் போல் 

இனிக்கிறது


கருப்புச் சட்டையும்

கத்திக் கம்புகளும்

நமக்கு கற்பிப்பது



முழுமையான கல்விதான் முக்கியம்📖💪



இந்த வாய்ப்பை அளித்த அருமை மாமா *கவிமதி. சோலச்சி* அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்✒️👍




மாப்பிள்ளை ப. அமிர்தராஜ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.


வெளியிடு: 

இனிய நந்தவனம் பதிப்பகம் 

திருச்சிராப்பள்ளி.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

Aravalli mountain.... - Solachy

 Aravalli mountain....

The beauty of the Aravalli mountain range lying without a fuss has been crammed into a thousand desires...

It lies cloudless, its eyes are filled with the smoke of burnt peanut skins..

Its eyes are troubled by being robbed, its throats are cut off..

I look closely at its limbs being cut off and commercial establishments are being erected on its back..

The attack of the desert on one side, the attack of sinners on the other,

the thorny plants like pimples,

to protect the remaining mane...!

             - Solachy





ஆரவல்லி மலைத்தொடர்....



ஆரவாரமின்றி கிடக்கும்

ஆரவல்லி மலைத்தொடரின் அழகினை

அள்ளிப் பருக

ஆயிரமாயிரம் ஆசைகளை

அடுக்கியே வைத்ததுண்டு...


கார்மேகமற்று

நிலக் கடலை தோல் எரித்த புகையால்

நீண்டு கிடக்கிறது..


களவாடப்படுவதாய்

கழுத்தறுக்கப்படுவதாய்

கலங்கியது அதன் கண்கள்..


உற்று நோக்குகிறேன்

அதன் உறுப்புகள் அறுக்கப்பட்டு

அதன் முதுகில் எழுப்பப்படுகிறது

அடுக்கடுக்காய் வியாபார விடுதிகள்..


பாலைவனத்தின் தாக்குதல் ஒரு பக்கம்

பாவிகளின் தாக்குதல் மறுபக்கம்

நிற்கதியற்று

எஞ்சிய மேனியை

தற்காத்துக் கொள்ள

முகப்பருக்களாய் கள்ளிச்செடிகள்...!

           - சோலச்சி