வியாழன், 5 நவம்பர், 2026

சுக்கு மல்லி காபி - சோலச்சி

 



ஆ: சுக்கு மல்லி காப்பி வாங்கி தாரேன்டி

         சூடாக பச்சி வாங்கி தாரேன்டி

          உன் சுத்தமான மனச தாயேன்டி

          என் சுகமே..

           சூடேற்றும் கொலுச தாயேன்டி

 

பெ: சுக்கு மல்லி காப்பி எனக்கு வேணாயா...

         சூடான பச்சி எனக்கு வேணாயா...

         உன் சுத்தமான மனசு போதும்யா

        என் இதமே...

       சொக்க வைக்கும் பேச்சு போதும்யா..

 

ஆ: அந்தப் பக்கம் இந்தப்பக்கம்

        அசஞ்சு தண்ணி கொண்டுபோற

        ஆத்தோரம் நீயும் வாரியா....

          என் சுகமே 

         காதோரம் சேதி தாரியா...

 

பெ : அந்தப் பக்கம் இந்தப்பக்கம்

         எந்த பக்கமும் மண்ணு இல்ல

        மண்ண கூட வித்துட்டாங்கய்யா...

      ஆத்துல தண்ணி வந்தே நாளு ஆகுதய்யா

      இப்பெல்லாம் ஊருக்குள்ள புகுந்து போகுதய்யா

 

ஆ: நடனமாடி அலையும் வர

         நதிகளுமே ஒன்னு சேரும்

         கடற்கரைக்கு நீயும் வாரியா....

         என் சுகமே...

        காதல் மொழி சொல்லித் தாரியா...

 

பெ: கடற்கரைக்கும் போய்வரலாம்

         காத்து கூட வாங்கி வரலாம்.

         இருந்தும் கழிவு எல்லாம் அங்கே தானய்யா

        கொட்டி கெடுக்குறாங்க நெனச்சு பாருயா...

 

ஆ : ஏத்து மரம் இறக்குமரம்

         ஊஞ்சல் கூட இருக்குது...

        மனசு விட்டு பேச வேணுன்டி

       என் சுகமே...

       மத்தியானம் பூங்கா வாரியா..

 

பெ : அழகழகா வண்ண மரங்கள்

        அத்தனையும் அங்கே இருக்கு

        மரத்துலதான் பேரு வெட்டுறான்

        என் இதமே....

       மனசு வலிக்கும் அங்கு வேணாம்யா..

 

ஆ : இத்தன இடமும் நானும் சொல்லி

       எந்த இடமும் ஒத்து வல்ல..

       ஏத்த இடத்த நீயும் சொல்லுடி..

       என் சுகமே....

       எனக்கு இனி எதுவும் தோணல..

 

பெ: இன்னும் தெரியல..

         உன் சுத்தமான மனசு போல

       கோட்டை ஒன்னுகட்டி இருக்க

       சேர்ந்து பேசி நாம வாழ

        அந்த இடம் நமக்கு போதும்யா...

 

ஆ: அடி என் ராசாத்தி

        அந்த குடிசையத்தான் நானும் நெனச்சேன்

       இப்பதான்டி தூக்கம் முழுச்சேன்

       இந்த சுகம் எனக்கு போதுண்டி...

 

ஆ , பெ : சுக்கு மல்லி சேர்த்து குடிப்போமா

       அட .... சொக்க வச்சு சொக்க வச்சு ...... ம் .... ம் ...

 

                    நட்புடன் சோலச்சி

    07.07.2010 புதன்கிழமை எழுதியது

 


கருத்துகள் இல்லை: