என்னைப் பற்றி

எனது படம்
அகரப்பட்டியைச் சேர்ந்த ''சோலச்சி'' என்னும் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். இயற்பெயர் தீ.திருப்பதி. புதுக்கோட்டை நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் 1998 இல் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருந்து எங்கள் வாழ்வில் ஒளியை உண்டாக்கியவர். அதனால் அவரின் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்டேன்.எனது நூல்கள் :சிறுகதை, 1.முதல் பரிசு2.கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்3.அட்டணக்கால், கவிதை: 1.காட்டு நெறிஞ்சி 2.விரிசல்1.''முதல் பரிசு'' சிறுகதை நூல் 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி.2."கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூல் 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.குறிப்பு: முதல்பரிசு மற்றும் கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் இரண்டு சிறுகதை நூல்களும் எம்.பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பேச : 9788210863

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இயக்குநர் தம்பிஇராமையா அவர்களுடன் - சோலச்சி

சந்திப்பின் மகிழ்வில்....

இன்று  (18.08.2016) அண்ணன் இயக்குநர் தம்பி இராமையா அவர்களை அவரது வீட்டில் (அவரது ஊரில்)  என் நண்பர் பொன்னையா அவர்களுடன் சந்தித்தேன். சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். கல்வி,  சமூகம், இலக்கியம் சார்ந்து நிறைய பேசினோம். அண்ணன் அவர்கள் அவர்தாம் கடந்து வந்த பாதையை சொல்லும்போது திரைத்துறையில் எவ்வளவு போராட்டங்களை சந்தித்து இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.  மிகவும்‌ யதார்த்தமான பேச்சைக் கண்டு வியக்கிறேன். எனது நூல்களைப் பெற்றுக்கொண்டு , ஒருசில பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு விரைவில் முழுவதுமாக வாசித்துவிட்டு தொடர்பு கொள்கிறேன் என்று எனது தொடர்பு எண்ணை வாங்கி தனது அலைபேசியில் பதிவு செய்து கொண்டார்கள்.  சென்னை வந்தா மறக்காமல் தொடர்பு கொள்ளுங்க தம்பி. "போராடுபவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் தம்பி " சொல்லிக்கொண்டே கைகுலுக்கினார்கள். மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றோம்.

கருத்துகள் இல்லை: