வியாழன், 4 ஜூலை, 2024

சோலச்சியைப் பாராட்டி மகிழ்ந்த கவிச்சுடர்

 கவிச்சுடர் கவிதை பித்தன் என்னும் பெரும் குணக்காரர்.



அலைபேசி உரையாடல்:


அழைப்பில் பெயரைப் பார்த்ததுமே மட்டற்ற மகிழ்ச்சி.



சோலச்சி எங்க இருக்கீங்க..


ஐயா.. பள்ளிக்கூடத்துலருந்து வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேங்கய்யா.


ம்..சரி குமரமலை கிட்ட தானே வீடு.


ஆமாங்கய்யா...


இன்னும் பத்து நிமிசத்துல நம்ம வீட்டுல இருப்பேன். பாத்து வாங்க...


இதைக் கேட்டதும் அடடா... இது என் வரம் அல்லவா... என்று பேரானந்தம் கொண்டேன்.



இன்று (04.07.2024 வியாழக்கிழமை ) மாலை 05.25க்கு எங்கள் இல்லத்திற்கு போற்றுதலுக்குரிய ஐயா கவிச்சுடர் அவர்கள் வருகை புரிந்தார்கள். 


முட்டிக்குறிச்சி நாவலுக்கு சௌமா இலக்கிய விருது கிடைத்திருப்பதை பாராட்டி பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்கள். இலக்கிய ஆளுமைகளை இருக்கும் இடம் தேடி வாழ்த்துவதில் பெரிய மனசுக்காரர். எங்கள் வீட்டில் உள்ள யாவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். எங்கள் இல்லத்தைச் சுற்றிக் காண்பித்தோம். வீட்டுக்குள் இருக்கும் சிறிய நூலகத்தையும் பார்வையிட்டார்கள். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நூல்களை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தார்கள். 

   நான் சிறுவனாக இருந்த பொழுது புல்வயல் கிராமம் நெறிகிப்பட்டிக்கு எங்கள் பெரியப்பா திரு. மாயழகு ஆசிரியர் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருவார்கள். என் தாத்தா எஸ்.ஆர்.பெரியையா அவர்கள் கவிச்சுடர் அவர்கள் மீது தீராத அன்பு கொண்டவர். எங்கள் தாத்தா (அம்மாவின் அப்பா) மலேசியாவிற்கு வேலைக்குச் சென்றிருந்த பொழுது நேதாஜி அவர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்ததாக சொல்லுவார். மேலும் புதுக்கோட்டை மகாராஜா அவர்கள் புல்வயல் கிராமத்திற்கு வந்திருந்த பொழுது கை கொடுத்து ஆங்கிலத்தில் உரையாடி இருக்கிறார். மகாராஜா வியந்து பாராட்டியதாக புல்வயல் கிராமத்தில் உள்ள மூத்தவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஐயா கவிச்சுடர் அவர்கள் நெறிகிப்பட்டிக்கு வரும் போதெல்லாம் சிறுவர்களாக இருந்த நாங்கள் ஆவலோடு பார்த்து மகிழ்வோம். ஐயா கவிச்சுடர் அவர்கள் நம் இல்லத்திற்கு வருகிறார் என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு  என் குழந்தையிடம் சொன்ன பொழுது என் மனைவி உள்பட யாரும் நம்பவே இல்லை. இன்று எங்கள் இல்லத்திற்கு வருகை புரிந்து எங்களை எல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறார்கள்.  காய்ந்து கிடந்த எங்கள் பூமியில் பசும்புற்கள் முளைத்ததாக எண்ணுகின்றேன். எங்கள் இல்லத்தில்  30 நிமிடங்களுக்கும் மேலாக  எங்களோடு கலந்துரையாடி எங்களோடு புகைப்படமெடுத்துக் கொண்டு நாங்கள் அளித்த தேநீரையும் மனநிறைவோடு அருந்தி வாழ்த்தி சென்று இருக்கும் எங்கள் ஐயா கவிச்சுடர் அவர்கள் வந்த இந்த நாள் இனியநாள் என்பேன்.


அக்கா ரமணிதேவி , அண்ணன் வைகை பிரபா,  அருமைத் தம்பி திலீபன்ராஜா போன்றோரின் உறவு முறைகளைப் பற்றியும் ஆவலோடு கேட்டறிந்து மகிழ்ந்தார்கள். 


புதுக்கோட்டை எப்போதும் பெரும் குணக்காரர்களின் கோட்டையாகவும் இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு சாட்சி.


இடம்: சோலச்சியின் இல்லம்

திருவள்ளுவர் நகர், 

குமரமலை அருகில். 

புல்வயல் கிராமம்.




















புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாராட்டு விழாவின் தொடர் நிகழ்வு தான்  ஐயா கவிச்சுடர் அவர்களின் இன்றைய வருகை.


முட்டிக்குறிச்சி நாவல் தேவைப்படுவோர்
தொடர்பு கொள்ளவும்: ஸீரோ டிகிரி எழுத்து பிரசுரம் +91 89250 61999

5 கருத்துகள்:

  1. நெகிழ்ச்சியாக இருக்கு அண்ணா, இன்னும் இதுபோன்ற மனிதர்கள் இருப்பது குறித்து. வீடு தேடி பாராட்டு என்பது, அவரின் பெருந்தன்மையும், அதே நேரத்தில், உண்மையான, காத்திரமான, விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை, மனதுக்கு நெருக்கமாக பேசுகிற, உன்னுடைய படைப்புகளுக்கு கிடைத்த வெகுமதி...

    பதிலளிநீக்கு
  2. அண்ணா, உண்ணைப்போலவே உன் படைப்புகள் எளிமையானவையாகவும், அதே நேரத்தில் சமூக அவலங்களுக்கு எதிராக மிகவும் காத்திரமாக சாட்டையை சுழற்றுகின்றன...

    பதிலளிநீக்கு
  3. 👏👏👏👏👏👏👏👏
    மச்சான் வளர்ச்சிக்கு கவிப்பேராற்றல் கல்விச் சுடர் ஐயா கவிதை பித்தன் அவர்கள் இல்லம் தேடி வந்து வாழ்த்துக்கள் பெற்றதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். மச்சான் அவர்கள் இன்னும் உயரிய விருதுகள் பெற வேண்டுமென்று மனநிறைவுடன் வாழ்த்தி மகிழ்கிறேன் உங்கள் எழுத்துக்கள் எப்பொழுதும் நிமிர்ந்து தமிழகத்தை (தமிழகத்தில் உள்ள இளைஞர்களை) திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்
    வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் மச்சான்
    நட்புடன்,
    சு.செங்குட்டுவன்.
    🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

    பதிலளிநீக்கு