வல்லூறுகளின் காம நகங்களை...
அடைக்கப்பட்டு நசுக்கப்பட்டு முடக்கப்பட்டு
அடுப்பங்கரையில் பொசுங்கி கிடந்தோம்
அறம் கடந்தும் புறம் பாடி போராடி
வென்று தலை நிமிர வீதி வந்தோம்
ஏடெடுத்து நாலெழுத்து கற்றிட துணிந்தோம்
ஏற்றுக்கொள்ள மனமில்லா எத்தன்களால்
எத்தனை முறையோ வீழ்ந்தோம்
நிலவென்றே தேய்த்திட நினைத்தோரை
நெருங்காத சூரியனாய் எரித்திட துணிவோம்
தளிரென்றும் பாராது மேய்ந்திட அலையும்
தறி கெட்ட மூடரை தகர்த்து எறிவோம்
கழிவறையாய் நினைப்போரை களத்தில் வெல்வோம்
கழிசடைகளை கண்டறிந்து உலகறியச் செய்வோம்
சட்டத்தின் ஓட்டைகளை அடைத்திட முயல்வோம்- செயல்
திட்டத்தின் மூலமாய் புதியன செய்வோம்
பூக்களை நசுக்கிட எண்ணலாமோ
பூமித்தாயும் பெண்ணும் வேறாகுமோ
வன்புணர்வுகள் தொடராய் வலம் வரலாமோ
வல்லூறுகளின் காம நகங்களை
வெட்டி எறிவோம் வீதியிலே
கொட்டம் அடங்கட்டும் பாரினிலே..!
- சோலச்சி
நன்றி :- பாசறை முரசு
[ நவம்பர் - டிசம்பர் 2026 பாசறை முரசு இதழில் வெளியானது ]
ஆசிரியர்
அஞ்சலை இல்லம்
4/21 டாக்டர் இராம் தெரு,
பெரம்பூர்,
சென்னை -11
balanpaasarai@gmail.com



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக