"அறியாமல் குடிபுகுந்தேன்
அடிபட்டு உணர்ந்தேன்
வெளியேறிவிட்டேன்
அந்த
புறம்போக்கு நிலத்தை விட்டு ...!
பட்டா போட்டது போட்டதுதான்
தங்கியே ஆக வேண்டுமென
தடாலடி செய்கின்றன
தருதலைகள் சில....!
வம்பு செய்வது - பொய்
வழக்கு தொடுப்பதென
திட்டமும் தீட்டுகின்றன
தீவெட்டிகள் சில.....!
புறம்போக்கை
புறம் தள்ளியபடி
நீளுகிறது
என் பயணம்...!
தகாத நிலத்தை
தான் ஏற்பது
தர்மமல்ல...!
தருதலைகள்
தடை போடட்டும்....!
தானாய் உடைபடும்...
தான் யார் என்பதும்
புலப்படும் ....!"
- சோலச்சி
புதுக்கோட்டை
1 கருத்து:
யாரு தோழர் அந்த புறம்போக்கு ... ethilumpudhumai.blogspot.in
கருத்துரையிடுக