செவ்வாய், 7 ஜூன், 2016

மாணவர் தேர்தல் - சோலச்சி

நான் ஆசிரியர் பணிக்கு வந்த நாள் முதல் ஆண்டுதோறும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளியில் மாணவர்களுக்கான பொதுத்தேர்தலை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி பணியாற்றி வருகின்றேன்.  தேர்தலில் நிற்க நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தகுதி உடையவர்கள். இந்தாண்டு பள்ளி தொடங்கிய முதல் நாளே மாணவர்கள் தேர்தல் வைக்கச் சொல்லிவிட்டார்கள். சேர்க்கை இன்றுதான் முடிந்ததால் இன்று முற்பகல் 11 மணிக்கு முறையாக தேர்தல் நடைபெற்றது. வெற்றியின் அடிப்படையில் அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் இடது புறத்திலிருந்து .....

உள்துறை அமைச்சர் ப.வினோதா

உள்துறை இணை அமைச்சர் ரா.ஆனந்தகுமார்

வெளிப்புறதுறை அமைச்சர் க.முருகவேல்

வெளிப்புற துறை இணை அமைச்சர் ப.சோமசுந்தரம்

புலனாய்வு மற்றும் உணவுத்துறை அமைச்சர் சி.ராமன்

புலனாய்வு மற்றும் உணவுத்துறை இணை அமைச்சர் மா.கிரிஜா

கண்காணிப்புத்துறை அமைச்சர் ரா.மஞ்சு

கண்காணிப்புத்துறை இணை அமைச்சர் பா.அணுஅர்ச்சனா...

இவர்களுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ்.நாகலெட்சுமி மற்றும் உங்கள் சோலச்சி

1 கருத்து: