புதன், 22 ஜூன், 2016

காஞ்சாத்து மலை - சோலச்சி

நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ...
      
          புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி யிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பூலாங்குறிச்சி என்னும் ஊர். இந்த ஊரில் தான் பிரமிக்கத்தக்க
            "காஞ்சாத்து மலை ".

     மலைகளின் அழகை ரசிக்க புதுக்கோட்டை யில் உள்ளவர்களே ஏற்காடு,  உதகமண்டலம்,  கொடைக்கானல் செல்கிறோம். அங்கு வெறும் மலைகளை மட்டும்தான் கண்டு ரசிக்க முடியும். இந்த காஞ்சாத்து மலை யில் கப்பல் போன்ற மலைகளும் ரயிலைப் போன்ற மலைகளும் அதிகமாக உள்ளன.  அடர்ந்த மலைக்காடுகள் சூழந்துள்ளன. ஓர் மலையின் உச்சியில் முருகன் கோயிலும் உள்ளது. இந்தக் காட்டில் காட்டு மாடுகள் அதிகமாக வாழ்ந்தன. தற்போது  கயவர்களால் வேட்டையாடியது போக எஞ்சிய காட்டு மாடுகள் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்றன. நரிகளும் முயல்களும் அதிகமாக வாழ்கின்றன. அரியவகை பழங்களான பாஞ்சாம் பழம், களாக்காய், தொரட்டிப்பழம் இங்கு அதிகம்.

     அருகில் இருக்கும் நமக்கு அதன் அழகான இயற்கையை ரசிக்க தெரியவில்லை.  ஒருமுறையாவது சென்று ரசியுங்கள் .... பின் குறிப்பு ... அங்கு நம்மை வழிநடத்த யாரும் இருக்க மாட்டார்கள். பாதுகாப்பு நம்மைச் சார்ந்தது.....
       நட்பின் வழியில்
        சோலச்சி புதுக்கோட்டை

2 கருத்துகள்:

  1. இப்போதுதான் வருகிறேன் - உங்கள் தளத்திற்கு!
    நண்பா! சொல்லவே இல்ல...?
    படங்களுடன் செய்தி அருமை (படங்களைக் கொஞ்சம் சிறிதாகப் போடலாம்) தொடருங்கள் தொடர்வேன், என் தளத்திலும் இணைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. என் வலைப்பட்டியலில் இணைத்துவிட்டேன் நண்பா. இனித் தொடர்வேன்.என் நண்பர்களும் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு