சுழன்று அடிக்கும் காற்றாய் இருக்கிறது என் எழுத்து. எனக்குள் பிறக்கும் என் எழுத்துகள் நிமிர்ந்தே நிற்கும். தவறுகள் செய்தால் உன் உச்சந்தலையில் அமர்ந்து ஓங்கிக் கொட்டும்..! - சோலச்சி
என்னைப் பற்றி
- சோலச்சி
- அகரப்பட்டியைச் சேர்ந்த ''சோலச்சி'' என்னும் நான் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். இயற்பெயர் தீ.திருப்பதி. புதுக்கோட்டை நச்சாந்துபட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம்வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் 1998 இல் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் உற்ற துணையாக இருந்து எங்கள் வாழ்வில் ஒளியை உண்டாக்கியவர். அதனால் அவரின் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்டேன்.எனது நூல்கள் :சிறுகதை, 1.முதல் பரிசு2.கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்3.அட்டணக்கால், கவிதை: 1.காட்டு நெறிஞ்சி 2.விரிசல்1.''முதல் பரிசு'' சிறுகதை நூல் 2017 கல்பாக்கம் சாலோம் அறக்கட்டளை விருது மற்றும் 5000/-(ஐயாயிரம் ரூபாய்) பொற்கிழி.2."கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும்" சிறுகதை நூல் 13.08.2017 சென்னை பொதிகை மின்னல் விருது மற்றும் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி. 23.12.2018 ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் சிறுகதைச் செம்மல் விருது மற்றும் ரூபாய் 5000/- (ஐந்தாயிரம்) பொற்கிழி.17.02.2019 புதுச்சேரி தமிழ்ச் சங்கம் விருது மற்றும் ரூபாய் 3000/- (மூவாயிரம்) பொற்கிழி.குறிப்பு: முதல்பரிசு மற்றும் கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் இரண்டு சிறுகதை நூல்களும் எம்.பில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பேச : 9788210863
செவ்வாய், 16 பிப்ரவரி, 2021
கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும் நூல் குறித்து பிரபு பாரதி விருத்தாச்சலம்
திங்கள், 1 பிப்ரவரி, 2021
கதையல்ல - சோலச்சி
வியாழன், 5 நவம்பர், 2020
மனுஸ்மிருதி விசிக முகநூல் பகிர்வு செய்தி
மகளிர் எழுச்சி
மக்கள் மீட்சி
கருத்துப் பரப்பு இயக்கம்!
~~~~~~~~~~~
திருமாவளவன் பெண்களை இழிவுசெய்ததாக பாஜக'வினர் அவதூறு பரப்புவது ஏன்?
மனுஸ்மிருதியை தடை செய்யவேண்டுமென விசிக'வினர் கோருவது ஏன்?
----------------------------------------------
' திருமாவளவன் பெண்களைக் கொச்சைப் படுத்திவிட்டார் ' என சமூக வலைத்தளங்களில் திடீரென கடந்த அக்டோபர்-21 முதல் பாஜகவினர், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர்.
தொல்.திருமாவளவன் அவர்கள் அப்படி என்னதான் பேசினார்? எங்கே பேசினார்? இவர்கள் இவ்வாறு பொய் சொல்லுவதற்கு என்ன காரணம்? உண்மையில் இதன் பின்னணி என்ன?
கடந்த செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் " ஐரோப்பிய ஒன்றிய பெரியார்-அம்பேத்கர் தோழர்கள் கூட்டமைப்பு " சார்பில், ’பெரியாரும் இந்திய அரசியலும்’ என்னும் பொருளில் இருநாள் இணையவெளி கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் பங்கேற்று 40 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் மனுநூல் குறித்தும் பேசினார்.
" தந்தை பெரியாரைப் பிராமண எதிர்ப்பாளர் கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமே பலரும் கூறுகிறார்கள். அவர் பிராமணர்களை எதிர்த்ததற்கும், கடவுளை மறுத்ததற்கும் அவர் மனுஸ்மிருதியைத் தீவிரமாக எதிர்த்ததே காரணமாகும். ஏனென்றால், மனுஸ்மிருதிதான் இந்துக்களில் பெரும்பான்மையினராக உள்ள உழைக்கும் பிற்படுத்தப்பட்டோரை சூத்திரர்கள் எனக் கேவலப்படுத்துகிறது. பெண்களை மிகவும் மோசமாக இழிவுபடுத்துகிறது " என்று தனது பேச்சில் தொல்.திருமாவளவன் விளக்கினார்.
அதில் சிலநொடிகள் அளவிலான பேச்சை மட்டுமே நறுக்கி எடுத்து, " இதோ பாருங்கள் இந்துப் பெண்களைக் கொச்சைப் படுத்துகிறார்" என்று உள்நோக்கத்துடன் பரப்புகின்றனர்.
அவர்களின் உண்மை நோக்கம், விசிக இடம்பெற்றுள்ள திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுத்து, இந்துவிரோத முத்திரைக் குத்தி, அரசியல் ஆதாயம் தேடுவதே ஆகும். இந்துக்கள் x இந்துஅல்லாதோர் அல்லது இந்துக்கள்x இந்துவிரோதிகள் என தமிழ்ச்சமூகத்தைப் பிளவுப்படுத்துவதே அவர்களின் நோக்கம். அதற்கு இவ்வாறு அவதூறு பரப்பி தொல்.திருமாவளவன் அவர்களைப் பலிகடாவாக ஆக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.
மனுஸ்மிருதி எதிர்ப்பு என்பது புதிய செயற்பாடு அல்ல. முதன்முறையாக இப்போதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னெடுக்கிறது என்று சொல்லக்கூடிய ஒன்றும் அல்ல. இதற்கு நீண்டகால வரலாறு உண்டு.
1927 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தில் பெருந்தலைவர் எம்.சி. இராஜா அவர்கள் " ஆதி திராவிடர் மாநாட்டில்" மனுஸ்மிரிதியைக் கொளுத்தியுள்ளார். அதே ஆண்டில், டிசம்பர் 4 ஆம் நாள் குடியாத்தத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், மஹத் என்னுமிடத்தில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி அம்மாநாட்டு வாயில் முன்பாக மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தினார். பெண்களையும் சூத்திரர்களையும் இழிவுப்படுத்தி ஒடுக்கி வைத்திருப்பதற்கு மனுநூலே காரணம் என்பதால்தான் ஒரு நூறாண்டுக்கு முன்னரே மேற்கண்ட தலைவர்கள் இவ்வாறு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் வழியில்தான் தொல்.திருமாவளவன் அவர்களும் மனுஸ்மிருதியின் மனிதகுல விரோதக் கருத்துகளை விமர்சித்துப் பேசினார். மனுஸ்மிருதியில் கூறியிருப்பதாக அவர் பேசியதை, அவரே பேசியதாகப் பொய்யாகவும் அவதூறாகவும் பாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் ஒருசேர பாஜகவின் இந்த தில்லுமுல்லு வேலையைக் கண்டித்த பிறகும்கூட இந்த அவதூறை வைத்து அரசியல் லாபம் தேட பாஜகவினர் முயற்சிக்கின்றனர்.இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவதூறு பரப்பும் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் பதிலாக அவர்களின் பொய்க்குற்றச்சாட்டின் அடிப்படையில் தொல்.திருமாவளவன் அவர்கள்மீது தமிழகக் காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது.
மனுஸ்மிருதி கூறுவதென்ன?
---------------------------------------
சுமார் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது.
# சூத்திரர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பிராமணர்கள் குடியிருக்கக் கூடாது. ( அத்தியாயம் 4:61)
# தன்னைவிட உயர்ந்த வர்ணத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூத்திரனைக் கொன்றுவிடவேண்டும். (அத்தியாயம் 8:374)
# சூத்திரன் நீதிபதியாக இருக்க முடியாது (அத்தியாயம் 8:20)
# சூத்திரர்கள் கல்வி பயிலக்கூடாது (அத்தியாயம் 3:156 & 4:99)
# இழிவான பெயர்களை மட்டுமே சூத்திரர்கள் வைத்துக்கொள்ளவேண்டும் ( அத்தியாயம் 2:31)
# பெண்களின் இயல்பே ஆண்களை மயக்குவதுதான் (அத்தியாயம் 2:213)
# ஒருவன் தனது தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ தனிமையில் அமர்ந்திருக்ககூடாது. கல்வி கற்றவரையும்கூட புலன்கள் மயக்கம்கொள்ளச் செய்துவிடும் (அத்தியாயம் 2:215)
# மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண்தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறார்கள். (அத்தியாயம் 9:14)
# ஆண்களின் மீதான இச்சையாலும், நிலைமாறும் புத்தியாலும், ஈவிரக்கமற்ற இயல்பினாலும் பெண்களை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அவர்கள் தன் கணவனுக்கு விசுவாசமாக இருக்கமாட்டார்கள் ( அத்தியாயம் 9:15)
# மாதர்களுக்கு இந்த சுபாவம் பிரம்மன் சிருஷ்டித்தபோதே உண்டானதென்று அறிந்து ஆடவர்கள், அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்யவேண்டியது(அத்தியாயம் 9:16)
# படுக்கை, ஆசனம், அலங்காரம் காமம், கோபம்- பொய், துரோக சிந்தை இவற்றை மாதர் பொருட்டே மனுவானவனவர் கற்பித்தார்.(அத்தியாயம் 9:17)
# பெண்னுக்குப் படிப்பதற்கு உரிமை இல்லை (அத்தியாயம் 9:18)
# மாதர்கள்பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும் சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு திருஷ்டாந்திரமாக அந்த விபச்சாரத்துக்கு சுருதிசொல்லிய பிராயச் சித்தத்தைக் கேளுங்கள் ( அத்தியாயம் 9:19)
# பெண், மகன், அடிமை – இம்மூவருக்கும் சொத்துரிமை கிடையாது (அத்தியாயம் 9:416)
இவை மனுஸ்மிருதியில் பிற்படுத்தப்பட்ட இந்து மக்களையும், பெண்களையும் பற்றிக் கூறப்பட்டவற்றில் சில பகுதிகளாகும்.
இப்போது கூறுங்கள் பெண்களை இழிவுபடுத்துவது மனுஸ்மிருதியா? அல்லது அதைத் தடை செய்யக் கோருகிற தொல்.திருமாவளவனா?
இப்போதும் மனுஸ்மிருதி!
-----------------------------------
இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் 27% திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என யுனிசெஃப் என்ற ஐநா சபையின் அமைப்பு 2019 ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்களின் திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பிஞ்சுப் பருவத்திலேயே திருமணம் செய்துகொடுத்துவிடவேண்டும் என்ற வழக்கம் மனுஸ்மிருதியினால் வந்ததுதான்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சட்டம் இருக்கிறது. பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்கும் வழக்கம் இந்தியா முழுமைக்கும் இருப்பதற்குக் காரணம் மனுஸ்மிருதிதான்.
2019 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக 4 லட்சத்து ஐந்தாயிரம் வன்கொடுமைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. 2018 ஆம் ஆண்டைவிட 7.3% அது அதிகரித்துள்ளது. அதற்குக் காரணம் பெண்களை சமமாக நடத்தக்கூடாது என்னும் மனுஸ்மிருதியின் செல்வாக்கு சமூகத்தில் நிலவுவதுதான்.
சாதிக்கொரு குடியிருப்பு; அனைத்துசாதியினரும் அர்ச்சகராக முடியாத நிலை; பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற முடியாது, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு தர முடியாது என்ற பாஜக அரசின் நிலைபாடு – இவை எல்லாவற்றுக்கும் காரணம் மனுஸ்மிருதியின் செல்வாக்குதான்.
அரசியலமைப்புச் சட்டமா? மனுவின் சட்டமா?
-----------------------------------------------
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) அறிமுகப்படுத்தப்பட்டபிறகுதான் மனுஸ்மிருதி இந்த நாட்டின் தண்டனைச் சட்டம் என்ற நிலையை இழந்தது. அதன் பிறகுதான் ஒரு குற்றத்தை எவர் செய்தாலும் ஒரே தண்டனைதான் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு புரட்சியாளர் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பதை இந்நாட்டின் அடிப்படை நெறியாக ஆக்கியது. ஆனால் மனுஸ்மிருதியால் பயனடைந்த சனாதனிகள் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்கவில்லை. சமூகத் தளத்தில் அதன் மேலாதிக்கத்தைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அனைவரும் சமம் என்கிறது. ஆனால், மனு ஸ்மிருதியோ அனைவரும் சமம் இல்லை என்கிறது; இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாலின ரீதியாக எந்த பாகுபாடும் காட்டக்கூடாது ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்படவேண்டும் என்கிறது; ஆனால் மனு ஸ்மிருதியோ பெண்ணுக்குக் கல்வி உரிமையோ சொத்துரிமையோ இல்லை என்று கூறுகிறது.
தற்போது மத்தியில் ஆளும் பாஜகவினர் இத்தகைய பெண்கள் விரோத மனுஸ்மிருதியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள்.
திரு வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு. கே.ஆர்.நாராயணனின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்ட அந்தத் திட்டத்தை இப்பொழுது எப்படியாவது நிறைவேற்றிவிடப் பார்க்கிறார்கள்.
மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டம் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமே ஆகும். மனு நூலைத் தடைசெய் என்ற முழக்கத்தின் உண்மையான பொருள் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்து என்பதேயாகும்.
வெறுப்பின் ஊற்றுக்கண்ணை அடைக்க மனுநூலைத் தடைசெய்க!
----------------------------------------------
மனுஸ்மிருதி என்ற ஒரு நூல் நாட்டில் இருக்கும் வரை சனாதனிகளின் மனிதகுல விரோத வெறுப்புப் பிரச்சாரத்தை நிறுத்தவே முடியாது. அதனால்தான், வெறுப்புப் பிரச்சாரத்தின் ஊற்றுக்கண்ணாகவும், வன்முறையை ஆதரிப்பதாகவும், பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகவும் பெண்களை மிக மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் நூலாகவும் விளங்குகின்ற மனுஸ்மிருதி என்னும் சனாதன நூலைத் தடைசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது. இந்த சமூகநீதி சமத்துவக் கோரிக்கையை ஆதரித்து அனைத்து சனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறோம்!
மகளிர் எழுச்சியே
மக்கள் மீட்சி!- ஆளும்
மனுநெறி வீழ்ச்சியே
மகத்தான புரட்சி!
-------- விசிக-----------
ஞாயிறு, 12 ஜூலை, 2020
சோலச்சியின் "காட்டு நெறிஞ்சி" நூல் குறித்து கவிஞர் ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்
காட்டு நெறிஞ்சி ஓர் அறிமுகம்…
பக்கங்கள் 128
புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன்.
அழகு வர்ணனை எதுகை மோனை என்பதை எல்லாம் தாண்டி சமுதாயத்தோடு கலந்து நிற்கும் பிரச்சனைகளை சாட்டையடியாக தன் கவிதைகளில் தந்துள்ளார் கவிஞர். ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது காதல் கவிதைகள்.
தாங்களும் ரசித்து மகிழ இங்கே பதிவிடுகிறேன்.
வாழுது
வறுமையும்
வரதட்சணை கொடுமையும்
தாண்டிவிட்டது
விதவிதமாய்
ஊழல்கள்"
பேசிய கவிஞர் இக்கவிதையின் முடிவில்....
அப்பாவி வாழ்க்கை
எப்ப மலருமோ
கண்ணீரே காணிக்கை"
என்ற தலைப்பில் அவர் எழுதிய வரிகள் உணர்வுகளின் உச்சம்.
ஒன்றுமில்லை
காலியாகவே
சனநாயகம்
மண்வளம் மட்டுமல்ல
மனிதவளமும் தான்"
பாரதியும் தாகூரும்
கண்ணீரால் கைகோர்த்தபடி வங்கக்கடலில்"
இந்தியா
விலைவாசியில்"
விலையுயர்ந்த வியாதியை
நாகரீகத் தொட்டிலில் நான்"
சாதிகளை கடந்தாய்
சாஸ்திரங்களை களைந்தாய்
இனத்தின் மீசையும்
முறுக்கி விடப்பட்டது
உன் வரவால் தான்"
இந்தப்படுகொலை….
பாராமுகமாய் பலரும்…
இரங்கல் தெரிவித்தபடி
குடல் கிழிந்து
தலைநசுங்கி கிடந்தது
சாலையின் மையத்தில்
அந்தத்தெருநாய்"
பொதுவுடைமை வாதியாய் பொங்கி எழுந்த கவிஞர் சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
நூல் தேவைக்கு
இனிய நந்தவனம் பதிப்பகம்
9443284823
ம.சக்திவேலாயுதம் நெருப்பு விழிகள்
9710513097
திங்கள், 1 ஜூன், 2020
கொரணா ஊரடங்கு - சோலச்சி
கொரணா ஊரடங்கில் ....... சோலச்சி
ஒவ்வொரு பேரிடரும் ஏதாவது ஒரு உண்மையை உலகுக்கு உணர்த்தி விட்டுத்தான் போகின்றது. விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் உயர்ந்து நிற்கிறது என மார்தட்டிக்கொள்ளும் நாம் வைரஸ் தொற்றுகளுக்கு மருந்த கண்டுபிடிக்க முடியாமல் அல்லாடுகிறோம்.
அன்னவாசல் காவல்துறையுடன் இணைந்து சமூக இடைவெளி பாதுகாப்பு பணியில் வயலோகம் வங்கியில்
அன்னவாசல் காவல்துறையுடன் இணைந்து சமூக இடைவெளி பாதுகாப்பு பணி பெருமாநாடு மற்றும் புல்வயல் ரேசன் கடைகளில்
https://youtu.be/OqEI_0he6qA
ஒவ்வொரு பேரிடரும் மனித நேயத்தை மண்ணில் வேரூன்றி வளரச் செய்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். சுனாமி உலகை ஆட்டிப்படைத்தபோது எங்கெல்லாம் மனித இனம் இருக்கின்றதோ அங்கிருந்தெல்லாம் மனித நேயம் குவியத் தொடங்கியது. அதேபோல் கஜா புயலால் மனித வாழ்வு சுருண்டபோது தன்னெழுச்சியாக பலர் திரண்டு துயரினை துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை வாரி வழங்கினர்.
புதுகை செல்வா அவர்களுடன் புதுக்கோட்டை அரிசி ஆலையில்
அரசாங்கம் செய்ய வேண்டும் என காலத்தை தள்ளிப் போடாமல் நினைத்த மாத்திரத்தில் கரம் கோர்த்து உதவிட எண்ணிலடங்கா இதயங்கள் இம்மண்ணில் இன்னும் இருக்கின்றன என்பதை இந்த கரோணா ஊரடங்கு காலத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார்கள். கரோணா ஊரடங்கால் வெளியில் வந்தால் நோய்தொற்று ஏற்பட்டு இறக்க நேரிடும் என்று உணர்ந்த போதும் துணிச்சலோடு எதிர்கொண்டு களம் காண புதுக்கோட்டை தோழர்கள் தயாராகினர்.
வனத்துறை அதிகாரி பி.தாமோதரன் அவர்களுடன்
வெளியில் வரமுடியாமல் வேலை இழந்து பசியால் வாடும் நிலை உணர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவும் நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் உதவிகளைப் பெற்று இல்லாதவர்களுக்கு வழங்கவும் புதுக்கோட்டை தோழர்கள் தம்பி மலையப்பன் ஒருங்கிணைப்பில் வாட்ச்அப் குழு ஒன்றை உருவாக்கி பணிகளைத் தொடங்கினர். அதே நேரத்தில் நாங்கள் (சோலச்சி) ,தாமோதரன், செங்குட்டுவன், நெய்வேலி முருகேசன் நால்வரும் வேலை இழந்து வாடுவோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்தோம். எங்களுக்கு துணையாக நின்றவர்கள் புதுக்கோட்டை தோழர்களான கவிஞர் மலையப்பன், கவிஞர் அப்துல் ஜலீல், புதுகை செல்வா, ஐங்கரன் அருண்மொழி, கவிஞர் கீதா, கவிஞர் கஸ்தூரிரெங்கன், மதியநல்லூர் தயாநிதி என தோழர்களின் பட்டியல் நீளும்.
சாதி மதங்களைக் கடந்து எங்கெல்லாம் மக்கள் துன்பப்படுகின்றனரோ அங்கெல்லாம் ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டினோம். மனிதனின் பிறவிப்பயன் இதுதானே. அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை வழங்கி நாங்களும் உங்களோடு இருக்கின்றோம் என அவர்களின் துயரில் பங்கு பெற்றோம்.
எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் நால்வரும் பயணித்த ஊர்களான அன்னவாசல், அகரப்பட்டி, குன்னக்குடிப்பட்டி, திருவள்ளுவர்நகர், நெறிகிப்பட்டி, சுந்தரப்பட்டி, சித்தூர், தெத்தினாம்பட்டி, வேலங்குடிப்பட்டி, மாங்குடி, ஊரப்பட்டி, பிராம்பட்டி, விளத்துப்பட்டி, கீழக்குறிச்சி, நார்த்தாமலை, மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, நல்லூர், அரசமலை, கீரங்குடி, குலமங்களம், சாத்தனூர், நெய்வேலி, வாழைக்குறிச்சி, இடையாத்தூர், வடமலாப்பூர், ஐடிஐ காலனி, மேலத்தானியம், உசிலம்பட்டி, காரச்சூராம்பட்டி, தாழம்பட்டி, பித்தகுடி, நடுவிப்பட்டி, பொன்னமராவதி, தச்சம்பட்டி, கருப்புக்குடிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, பொட்டப்பட்டி, வலசைப்பட்டி, அம்மாபட்டி, கொன்னத்தான்பட்டி, மருத்துவக்குடிப்பட்டி, வேலங்குடி, துவார், பூலாங்குறிச்சி, ராங்கியம், சுந்தரசோழபுரம் , ஆலவயல், பிடாரம்பட்டி என ஊர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
பாதிக்கப்பட்ட உறவுகளைத் தேடி பயணிக்கின்ற தருணத்தில் நிறைய நிகழ்வுகளைச் சந்தித்தோம். வலசைப்பட்டிக்கு சென்றிருந்தபோது நாங்கள் எதிர்பார்த்திராத வகையில் எங்களுக்கு மதிய உணவு அளித்ததோடு விட்டுவிடாமல் என்னையும் உங்களோடு உதவ இணைத்துக் கொள்ளுங்கள் என்று உணர்வு பூர்வமாக உரிமையோடு இணைத்துக்கொண்டார் வலசைப்பட்டி துரை அவர்கள். தனது தோட்டத்தில் விளைந்த ஐம்பது கிலோவுக்கு குறையாமல் கத்தரிக்காயையும் இரண்டு மூடை அரிசியையும் வழங்கி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் வலசைப்பட்டி துரை அவர்கள்.
மேலப்பனையூர் கலைராஜன், மேலப்பனையூர் காமராஜ் ஆசிரியர், பூவலாக்குடி முனைவர் கருப்பையா தலைமையாசிரியர் , புவனேஸ்வரன் ஆசிரியர், கட்டுக்குடிப்பட்டி சந்திரசேகர், உசிலம்பட்டி இராமநாதன் ஆசிரியர், ராராபுரம் செல்வம், ராராபுரம் அய்யாச்சாமி, குலமங்களம் அம்பேத்கர் இளைஞர் மன்றத்தின் உறவுகள், ஆத்தங்காடு இரா.வெள்ளைச்சாமி ஆசிரியர், கீரனூர் சுந்தரி ஆசிரியர், மரிங்கிப்பட்டி அருண்குமார், காரைக்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் சோலச்சிஇராமநாதன், நெடுஞ்சாலைத்துறை நல்லூர் வீரன், குலமங்கலம் சண்முகம், கீழக்குறிச்சி சி.பாலசுப்பிரமணியம், குலமங்கலம் ராமசாமி, பொன்னமராவதி சிவசுப்பிரமணியன் என உதவிக்கரம் நீட்டினார்கள்.
வாய்கிழியப் பேசுகிறவர்கள் களத்தில் நின்று மக்கள் பணியாற்றிட வரமாட்டார்கள். நாமும் நம்மோடு இணைந்திருக்கும் உறவுகளும் அப்படியல்ல. மக்கள் பணியாற்றவே பிறந்துள்ளோம். ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் பயணிக்க எம்மோடு துணை நின்றவர் அன்புத்தம்பி அரசமலை பி.தாமோதரன். தனது மகிழுந்தை கொரணா பணிக்காகவே முழுமையாக அர்ப்பணித்தார்.
ஒரு ஊரில் நல உதவிகள் செய்துகொண்டு இருக்கும்போது ஒருவர் எங்களைப்பார்த்துக் கேட்டார் ''ஊருக்கு வெளியில எதுக்கு திருட்டுத்தனமா கொடுக்குறீங்க'' என்று. அவரால் இந்த மண்ணுக்கும் மனித இனத்துக்கும் எள்ளளவும் நன்மை பயக்குமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இங்கு இல்லாதவர்களை விட இருப்பவர்கள்தான் உதவிகள் என்று வந்து விட்டால் முதலில் கை ஏந்துகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்கவே சில நேரங்களில் வறுமையுற்றவர்களை வரவழைத்து தனியாக வழங்கினோம்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
அன்னவாசல் கிளை பொறுப்பாளர்களுடன் இலுப்பூரில்
ஒரு தாய் சொன்னார் " சாமி ஒங்களோட சேர்ந்த அத்தன பேரும் நல்லா இருக்கனும் '' என்று சொல்லி கண்ணீர் வடித்தார். இன்னொருவர் சொன்னார் " இன்னக்கி எங்க கொலசாமிதாய்யா ஒங்கள இங்க கொண்டு வந்து விட்ருக்கு '' என்றார். இந்த வலி மிகுந்த வரிகள் என் நெஞ்சை துளைத்துக்கொண்டே இருக்கின்றன. எங்களுடைய நோக்கம் நல்லவர்கள் ஒன்று கூடினால் நாங்களும் ஓடிவந்து ஒட்டிக் கொள்வோம் உங்களோடு பயணிக்க. நாங்கள் முன்னெடுத்துப் பயணிக்கின்றோம் இனியும் காலம்தாழ்த்தாது எங்களோடு எப்போதும் கரம் கோர்ப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
புதுக்கோட்டை தோழர்களான பாலாஜி ஆசிரியர், அப்துல் ஜலீல் ஆசிரியர், புதுகை செல்வா, ஐங்கரன் அருண்மொழி, தம்பி மலையப்பன் இவர்கள் பல குழுக்களாக பயணித்து ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் மனநிலை பாதித்தவர்களுக்கும் வழிதவறியவர்களுக்கும் உதவிகள் வழங்கியதன் பட்டியல் நீளும்.
இந்த கொரணா ஊரடங்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. சேமிக்கவும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்பினையும் வழங்கி இருக்கிறது. ''மதுவுக்கு எதிராகவும் புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பாயானால் நீயே என் தோழன்" என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
எங்களிடம் பொருளாகவும் பணமாகவும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிட முன் வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனசார நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.
என் ப்ரிய்திற்குரிய உறவுகளே மக்கள் பணியாற்றிட தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்போம். நல்லவர்களாலும் நல்ல உள்ளங்களாலும் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகின்றது.
ஞாயிறு, 24 மே, 2020
முதல் பரிசு - சோலச்சி- ஒரு பார்வை - பொன்.குமார்
அகவை தீ. திருப்பதி என்றானார். அறிவியல் ஆசிரியையும் வறுமையைப் போக்கி வயிற்றுக்குச் சோறிட்டவருமான சோலச்சி என்பவரின் பெயரை தன் புனைப் பெயராக நன்றியுடன் வைத்துள்ளார். ஒவ்வொருவரின் புனைப் பெயருக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கும். இது சற்றே வித்தியாசமானது. இத் தொகுப்பிலும் புனைப் பெயருக்கான காரணத்தைக் குறிப்பிடும் வகையில் ' வாய்ப் பார்த்தான்' கதை ஒன்றும் உள்ளது. பெண் பெயரில் எழுதும் ஆண்கள் மீது ஒரு குற்றச் சாட்டு உண்டு. இது குற்றச் சாட்டுக்கு அப்பாற்பட்டது.
சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'முதல் பரிசு'. 2002ஆம் ஆண்டில் ஒரு துணுக்கு எழுதி ' முதல் பரிசுத் தொகை ' பெற்றுள்ளார். இதுவே சோலச்சியை எழுதத் தூண்டியுள்ளது. துணுக்கு எழுதியவர் சிறு கதை எழுதும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார். இத்தொகுப்பில் ' ரெண்டாவது ரகம்' என்னும் கதையை எழுதியுள்ளார். எழுத்தாளன் ஒருவன் முதல் பரிசு பெற்றதானது. எழுத்தாளன் இறந்த பிறகே அவன் பரிசு பெற்ற விவரம் தெரிய வருகிறது. இது சோகமானது. '
உண்டு. கதைகளின் எண்ணிக்கையைக் குறைத்து கனமான கதைகளை மட்டும் தொகுத்திருந்தால் முதல் பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். சோலச்சி அனைத்துத் தர மக்களையும் கதைகளில் உலாவ விட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
சோலச்சியை நிறுத்தி பாரர்க்க முடியவில்லை. எதார்த்த வலைக்குள்ளளேயே எல்லா கதைகளும் சிக்கியுள்ளன. அனைத்து கதைகளையும் ஆசிரியரே கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. வடிவத்தில் மாற்றம் இல்லாததால் வாசிப்பில் சலிப்பு எற்படுவதை உணர முடிகிறது.
ஒவ்வொரு சிறு கதையின் முடிவிலும் அக் கதையின் போக்கை பிரதிபலிக்கும் வகையில் அதன் இறுதி அமைத்திருப்பது சிறப்பு. கவிமதி சோலச்சியின் முயற்சி வரவேற்பிற்குரியது. தொடர்ந்து முயன்று ' முதல் பரிசு' பெற வாழ்த்துக்கள்.
இனிய நந்தவனம் திருச்சி 620 003
9003344742
புதன், 15 ஏப்ரல், 2020
என்னுயிரே ஆருயிரே - சோலச்சி
உன்னைத்தான் நானும் இங்கே
மானே.! தான் இழந்து வாடுறேனே
நானும் ஏதேதோ பாடுறேனே
அந்த காலங்கள் இன்று வருமா
மானே சோகங்கள் தான் தீருமா.....
நீர் கொட்டைதான் முளைச்சிருக்கு
நீயும் நானும் தாவணியில்
அயிரை மீனும்தான் பிடிச்சு வந்தோம் - அன்று
அயிரை குழம்பாச்சு இன்று
என் கண்கள் குளமாச்சு....
நான் உனக்காக காத்திருக்க
பை தூக்கி நடந்து வந்த நானும்
பலாச்சுளை வாங்கி தந்தேன் - அன்று
பாலாச்சுளை இனிப்பாச்சு இன்று
பாதையெல்லாம் முள்ளாச்சு.....
யாரும் பாராமல் பயணிக்க
என் மார்போடு கட்டியணைச்ச
கோடை மார்கழி ஆனதென்ன - அன்று
சூரியன் குளிர்ந்ததடி மானே
உன் நினைவு வாட்டுதடி.....
அழகே அதை ரசிக்க
மலை மீது ஏறிப்போயி அங்கே
மாறிமாறி கொஞ்சிக்கிட்டோம் - இன்றும்
கோட்டை என்னை தழுவுதடி நாளும்
என் உசுரு நழுவுதடி.....
வாங்கித் தர நீ ருசிச்ச
உதட்டில் தேன் வழிய நான் ருசிச்சேன்
விழியோடு ஒத்தடம்தான் மானே
வேண்டும்படி கொடுத்துக்கிட்டோம்
அந்த காலங்கள் என்று வருமோ
இழந்த இன்பங்கள் தான் தருமோ......
பேச : 9788210863
சனி, 11 ஏப்ரல், 2020
நந்தவனமும் சோலச்சியும்
நந்தவனத்தோடு சோலச்சி.......
வணக்கம் ...
பேரன்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
இனிய நந்தவனம் மாத இதழ்
த.பெ.எண் 214. எண்.17,
பாய்க்காரத் தெரு,
உறையூர்,
திருச்சிராப்பள்ளி - 620003





































