மானமுள்ள மனித இனமே
மதுவால் அழியுது உன் இனமே
இன்னும் தூங்கி கெடக்குறீயே
சத்தியமா சாபக்கேடா...!
ஊருக்கொரு பள்ளிக்கூடம்
திறந்து வச்சவர் பெருந்தலைவர்
தலைகுனிஞ்சு வாழ்ந்த நம்மை
தலை நிமிரச் செய்தவர் தந்தைபெரியார்
இவங்க வாழ்ந்த பூமியிலே
மது முட்டுக்கட்டை போடுதடா-அதுக்கு
முடிவு கட்ட வேணுமடா...!
நெல் விளையும் பூமியத்தான்
பாலையாக்க துணிஞ்சுட்டானே
ஒருமைப்பாடு பேசுறோமே
வாழ தண்ணி கொடுக்க மறுக்குறோமே
வெந்து நொந்து வாழயிலே
மது மேலும் வேதனை கொடுக்குதடா
குடும்பம் நடுத்தெருவில் நிற்குதடா..!
ஒழச்ச காசு வீட்டுக்கில்ல
ஒட்டுத்துணிக்கும் வழியுமில்ல
சண்டை வம்பு வீட்டுலதான்
சந்தி சிரிச்சு போகுதடா
வாழப்பிறந்த தலைமுறையோ
வழி இழந்து தவிக்குதடா - தோழா
இன்னும் விழிக்க மறுக்குறீயே..!
-சோலச்சி
புதுக்கோட்டை
@ வலைப்பதிவர் சந்திப்பு மின்னிலக்கிய போட்டிக்காக எழுதப்பட்டது. 4.புதுக்கவிதை வகை.
@ இக்கவிதை வேறு எந்த ஊடகத்திலும் வெளியாக வில்லை என
உறுதி கூ றுகிறேன்.
3 கருத்துகள்:
நன்றி அய்யா!
வணக்கம் அருமையான கவி வரிகள்
வாழ்த்துக்கள்! நன்றி
அருமை தம்பி வெற்றிபெற வழ்த்துக்கள்
கருத்துரையிடுக