"அவன் இவன் என்ற
சாதியை மறந்திடடா...
அண்ணன் தம்பி மாமன் மச்சான்
உறவினை தொடர்ந்திடடா.....!
உலகை நோக்கி ஓடிட வேண்டாம்
உன் பின்னால் வர வேண்டும் ...!
காலச்சக்கரம் சுழலும் தானாய்
முன்னேற வேண்டும் ..! - இது
அவசர உலகமடா - உன்
அறிவால் நிலைத்திடடா....!
குனிந்து குனிந்து ஒடிந்தது போதும்
முதுகை நிமிர்த்திடடா...!
தலைவர் ஒருவரே அறிவுலக மேதையே
அண்ணல் வழியில் நடந்திடடா...! - இது
களவாணி உலகமடா - உன்னுள்
களங்கம் வராமல் பாத்துக்கடா....!
பிறர் துணியை துவைத்தே வெளுத்தே சாகும்
வேதனை உனக்கில்லையா...
மனித கழிவினை மனிதன் அள்ளும்
கொடுமை புரியலையா - இது
பொல்லாத உலகமடா - நீ
பொங்கி எழுந்திடடா....!
முடியை திருத்தி அழகுற செய்யும்
மனிதன் முன்னேறக் கூடாதா...
ஏற்றம் இல்லை தாழ்வும் இல்லை
இழி சொல்லை ஒழித்திடடா... இங்கு
வாழ பிறந்தோமடா - இதில்
வெறுப்புகள் ஏனடா....!"
- சோலச்சி
புதுக்கோட்டை
13.03 2016 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர் (22) படுகொலை செய்யப்பட்டார். இந்த சமூகம் சாதியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆணவக் கொலைகளை அரங்கேற்றி வருகிறது. அரசு வேடிக்கை பார்க்கிறது.... நீதிமன்றங்கள் .......?
சாதி வெறி பிடித்த வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...
நெஞ்சு பொறுக்குதில்லையே.....
-முண்டாசு கவிஞர் பாரதி
1 கருத்து:
பாடல் அருமை... இன்னும் எழுதியிருகாலம் நண்பரே
கருத்துரையிடுக