எழுத்தாளர்களை வளர்ப்பது, சமூக நீதிகளை நிலைநாட்டுவதில் சிற்றிதழ்களின் பங்கு அளப்பறியது. வளர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலரும் சிற்றிதழ்களில் எழுதியவர்களாகத்தான் இருப்பார்கள்.
சிற்றிதழ்களுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது கவிதையை முதன்முதலில் வெளியிட்டு பெருமைபடுத்திய இதழ் "தாழம்பூ மாத இதழ் ". இன்னும் அந்த இதழ் கையெழுத்துப்பிரதியாக வெளிவந்து சரித்திரம் படைத்துக்கொண்டு இருக்கின்றது.
இலட்சியத்தோடு கிளம்பிய பல மாத இதழ்கள் பொருளாதார பற்றாக்குறையால் மேலும் வளரமுடியாமலேயே நின்றுவிட்டன. இருந்தபோதும் சிற்றிதழ்கள் புதிது புதிதாய் தோன்றிக்கொண்டு சமூகப்பணியும் இலக்கியப்பணியும் ஆற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.
சிற்றிதழ்கள் வளரவேண்டுமெனில் நம்மால் இயன்ற பங்களிப்பு அதன் சந்தாதாரர் ஆவதுதான். அதற்காக எல்லா இதழ்களுக்கும் சந்தாதாரர் ஆகமுடியுமா என்றால்...... முடியாதுதான். காரணம் பொருளாதார பிரச்சினை. எனது பொருளாதாரத்திற்கு ஏற்றார்போல் சந்தாதாரராகி வருகின்றேன். இன்று பத்து இதழ்களுக்கு பணவிடை (அஞ்சல்) அனுப்பி சந்தாரராகி உள்ளேன். இன்னும் இதழ்கள் சிலவற்றுக்கு அடுத்த மாதம் பணவிடை அனுப்பி வைக்க வேண்டும். இன்று பணவிடை அனுப்பிய இதழ்களின் விபரம் .....
"சிகரம் காலாண்டிதழ்"
"நீலநிலா காலாண்டிதழ்"
"பாவையர் மலர் மாத இதழ்"
"வெற்றிமுனை மாத இதழ்"
"இனிய நந்தவனம் மாத இதழ்"
"ஏழைதாசன் மாத இதழ்"
"புகழ்ச்செல்வி மாத இதழ்"
"தாழம்பூ மாத இதழ்"
"பொதிகைமின்னல் மாத இதழ்"
"புதிய உறவு மாத இதழ்"
மக்கள் சமூகம் மலர எழுதுவோம் :
மாற்றத்தைக் கொண்டு வருவோம்...!
- நட்பின் வழியில்
சோலச்சி
புதுக்கோட்டை
செல் :9788210863
2 கருத்துகள்:
வாழ்த்துக்கள் நண்பா. சிற்றிதழ்களின் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும், அவைகளின் மீது நீங்கள் கொண்டுள்ள நன்நம்பிக்கைக்கும் என் இதயம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நானும் சிற்றிதழ் ஊக்குவிப்புத் திட்டம் என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக சுமார் 26 இதழ்களுக்கு 3 வருட சந்தா கட்டி உள்ளேன். நான் துபாயிலிருக்கின்றேன். என் நோக்கம் இதழ்களின் தொடர் வெளியீட்டை உறுதிப்படுத்துவதற்காகத்தான். நன்றி.
கிருஷ்.ராமதாஸ், துபாய் [பெரம்பலூர்].
தோழர் கிருஷ்.ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி
நட்பின் வழியில்
சோலச்சி
கருத்துரையிடுக